பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1772 கம்பன் கலை நிலை 1. காந்தருவம் கந்தருவர் என்பவர் தேவ கணத்துள் ஒரு பிரிவினர். சிறந்த போக கிலையினர். அழகும் இளமையும் என்றும் குன்ருமல் விழுமிய அன்பினராய்ப் பருவ மங்கையும் உருவ மைந்தனும் ஒரு முகமாய் மருவி இன்ப கலங்களை நுகர்ந்து கிளைக்கும் இயல் பினர். பிறர் கொடுப்பதும் கொள்வதும் இல்லாமல் தாமே எதிர்ப் பட்டுக் கண்டவுடனே காகல் மண்டி ஒருபாலும் கோடாமல் இருபாலும் கலந்து மகிழும் இன்ப மரபினர் ஆதலால் அன்பு கலங்கனிந்த அந்தக் கந்தருவ வழக்கம் காந்தருவம் என வந்தது. எண் வகை மணங்களுள் இது இன்ப கலம் கனிந்தது. உற்ருர் உறவினர் த்ருவரும் காணுமல் இருவரும் கனியே உவந்துகொள் ளுவது ஆதலால் களவு என மேலோர் இதன் உளவு அறிய உாைத்தார். அன்பின் ஐந்திணைக் களவு எனப் படுவது அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மனுர் புலவர். (இறையனர்) காமக் கூட்டம் காணும் காலே மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை கல்யாழ்த் துணேமையோர் இயல்பே. (தொல்காப்பியர்) ஊமலி காதல் களவு எனப் படுவது ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள் யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப. நம்பியார்) ஆடவரும் மகளிரும் மணந்துகொள்ளும் வகைகள் எட்டு வகையின என்று சுட்டிவிட்டு அவற்றுள் கந்தருவ மணத்தை மட்டும் நூல்கள் விரித்து விளக்கி யிருத்தலால் அதன் வியன் கிலை புலம்ை. யாழோர் = கக்கருவர். கூட்டம்=மணம். எட்டு வகை மணங்கள். பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இசாக்கதம், பைசாசம் என மணங்கள் எண் வகையாய் எண்ணப்பட்டுள்ளன. மக்கட் கூட்டக்கில் இவை மருவி வரு கின்றனவாயினும் வெளியே தெரியாமல் அருகி கிற்கின்றன.