பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1774 கம்பன் கலை நிலை இந்த இழிக்க நிலையில் ஒருதலைக் காமமாய்க் கடுங்கா கல் மண்டிச் சூர்ப்பங்கை இங்கே அழிந்து அலமருகின்ருள். இக் கோமகன் குறிப்பையும் உணராமல், சொல்லுகின்ற கேலிகளையும் தெரிந்து கொள்ளாமல் காம பாவசையாய்ப் பரிந்து விாைகின்ருள். ஆசை மீறவே அறிவு காசம் ஆயது. “It is impossible to love and be wise ’’ (LOVE) காதல் மிகின் அங்கே உணர்வு இராது ' என்னும் இது ஈண்டு உனா வுரியது. காமக் கேட்டால் அவள் தீமை மிக அடைகின்ருள். தன் பொல்லாக் காகலைச் செல்லாத இடத்தில் செலுத்தி அல்லலுழ ங்து படுகின்ருள். “ Nuptial love maketh mankind ; friendly love perfecteth it : but wanton love corrupteth and embaseth it.” (Bacon) மனைவியின் காதல் சங்க கியை உண்டாக்குகின்றது ; நண் பன் அன்பு பண்பை வளர்க்கிறது ; இழிந்த காமக் காதல் பழி யையும் அவமான க்கையும் விளைக்கின்றது ' எனப் பேக்கன் என்னும் பேராசிரியர் கூறியுள்ளது கூர்ந்து நோக்கத்தக்கது. காதல் உயிர் வேட்கையாய்ப் பரிணமித்து வருகின்றது ; அது நெறியே செல்லின் உயர்வடைகின்றது ; பிறழின் இழிவு மகின்றது உள்ளக்கின் அனுபவ உணர்ச்சி ஆதலால் அதனை உரையால் தெளிவு படுத்த இயலாது. “The greatest argument for love is love (Dryden) 'காதல் வாதம் காதலேயாம்' என்னும் இது ஈண்டு அறியத் தக்கது. புல்லி நுகர்வது சொல்லில் அமையாது. ஒத்த பண்பு, ஒத க அறிவு, ஒக்க அன்பில் உதித்த எழு கின்ற உத்தமமான காதல் மனத்தை எக் துணையும் யாதும் ஒவ்வாத அப் பேதை விழைத்து பெரிதும் ஏகம் புரிகின் ருள். தன்னை ஆதரித்துக்கொள்ளின் ஊகியங்கள் பல உளவாம் என ஆசையை மூட்டிக் கன் ஒசையை நீட்டி ள்ை. அசிய அ. ச பதவி கிடைக்கும் ; பெரிய மேன்மைகள் யாவும் பெருகிவரும்.