பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1775 கொடிய விாாாய்ப் பகை மண்டியுள்ள அண்ணன் மார் இனிய ாேய் உறவுகொண்டு உதவி புரிவர். அளவிடலரிய பெருமைகள் எல்லாம் ஒருங்கே விளையும் என வளமை கொழித்தாள். அவளுடைய உரைகளைக் கேட்ட பொழுது இவ் வுக்தமன் உள்ளத்தில் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. ஈகைத்து விட்டான். அங் நகையோடு வெளி வந்த உரைகள் அயலே வருகின்றன. நிருதர்தம் அருளும் பெற்றேன்: நின்கலம் பெற்றேன்; நின்னேடு ஒருவரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ; ஒன்ருே திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயங்கது என்னு リー வரிசிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான். பரிகாச வார்த்தைகளால் உருவாகி வந்துள்ள இப்பாடலைக் கருத்துான்றிப் படிக்கின்ற எவரும் சிரிக்காமல் இருக்கமுடியாது. அரிய அடக்கமுடையயிைனும் இராமன் பெரிய சாசி என்பதை இங்கே தொடர்ந்து அறிந்து வருகின்ருேம். " உன்னைக் கலியாணம் செய்துகொண்டு உன்னேடு கூடி உவந்து வாழும்படியான உயர்ந்த பாக்கியத்தைப் பெற்றேன். அாக்கர்களுடைய அன்பும் அருளும் கிடைத்தன; அரிய அரச பதவியும் வந்தது ; என் கவப் பயன் தான் என்னே ' என வியப்பும் விம்மிகமும் வெளிப்பட்டு விளங்க, உள்ளே இகழ்ச்சி யும் கைப்பும் பொங்க உரைகள் ஒலித்திருக்கின்றன.

திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்தது.' நான் அயோத்தியிலேயே தங்கியிருந்தால் இந்தப் பாக்கியங்கள் எல்லாம் கிடைக்குமா ? ஊரைவிட்டுக் காட்டுக் கு வந்த பின்பு தான் எனது அரிய தவம் உரிய பலனை உதவ நேர்ந்தது ; பெரிய செல்வங்களை எய்தினேன் எனத் தன் புண்ணியப்பேற்றை

எண்ணி மகிழ்ந்தபடியாய் இது கண்ணி வந்துள்ளது. 'மண் அரசிழந்து வறியனுய் வந்துள்ள நான் இடையே ஒரு அரிய பெண் அாசம், பெரிய விண்ணரசும் பெற்ற எவரும் எண் அரசாயினேன்; இவ்வளவு பெரும் பேறுகள் வலிய வந்து சோவேண்டுமாயின் நான் எவ்வளவு தவங்களைச் செய்திருக்க வேண்டும்? ' என எண்ணியிருப்பதுபோல் வார்த்தைகள் எழுங் திருக்கின்றன. நவமான சுவைகள் மொழிகளில் நடமாடுகின்றன.