பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1776 கம்பன் கலை நிலை அப்பேதை வினே உவகையுமம்படி இம்மேதை பேசி யிருக்கும் விநய வார்த்தைகளை கினையும்தோறும் கெஞ்சில் கை வருகின்றது. எதிர்மறை ஒலிகளாய் வந்துள்ள இவ்வசனங்கள் அதி சாது ரியமானவை. மதிகலங்கனியச் சாசமொழிகள் ஆடுவதில் இத் தலைமகன் தலைசிறந்துள்ளமையை இப் படலத்தில்தான் காண் கின்ருேம். வேறு எங்கனும் இங்ங்ணம் காணமுடியாது. எயிறு இலங்க நக்கான் என்றது அப்பொழுது சிரித்திருக் கும் சிரிப்பு நிலையை வெளிப்படுத்தி யுள்ளது. எயிறு=பல். தக்தங்கள் வெளியே தெரியும்படி நகைத்துள்ளமையால் அது பெருஞ் சிரிப்பாய் உள்ளக் கருத்தை நயமா விளக்கி கின்றது. நகை வகை நான்கு. அகத்தில் உவகை யுறின் மனிதன் முகத்தில் நகையுண்டாம். இவ்வுண்மை உயிர்களின் பொது இயற்கையாய் மருவியிருக்கின் றது. சிரிப்பினலேதான் மனிதன் தனியே சிறப்புற்று நிற்ன்ெ முன். மிருகங்களுக்குச் சிரிக்கத் தெரியா. அந்த அரிய சிரிப்பை விசேடமாகப் பெற்றிருத்தலால் மனிதன் சிரிக்கத் தெரிந்த பிராணி என்று குறிக்கப்பட்டான். இயற்கை நியம மான இம்மகிழ்ச்சிச் சிரிப்பைத் தவிர வேறு சில காரணங்களா அலும் அது விளங்து வருகின்றது. பிறருடைய மடமையைக் கண்டபோதும்,கோபம்கொண்ட போதும் சிரிப்பு உண்டாகின்றது. வீரச் சிரிப்பு, கேலிச்சிரிப்பு, கோபச் சிரிப்பு, உவகைச் சிரிப்பு, கோட்டிச் சிரிப்பு என கை பலவகையாய் மருவியிருப்பினும் ஆசிரியர் கொல்காப்பியனர் அதனை நான்காகத் தொகுத்திருக்கின்ருர். எள்ளல் இளமை பேதைமை மடன் என்று உள்ளப் பட்ட நகைகான்கு என்ப. (தொல்காப்பியம்) இந்த நான்கு நிலையுள் இங்கே கம் கம்பி நகைத்தது எந்த வகையைச் சேர்ந்தது ? அவளுடைய மடமையை கினேந்து எள்ளி கைத்திருத்தலால் இதன் இயல்பினை உள்ளி உணர்ந்து கொள்ளலாம். சிரிப்பிலும் சீர்மை தெரிகின்றது.