பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1780 கம்பன் கலை நிலை அஞ்சினள் அஞ்சி அன்னம் மின்னிடை அலச ஒடிப் so பஞ்சின்மெல் அடிகள் நோவப் பதைத்தனள் பருவக் கால 27. மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்னக் குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக்கொண்டாள். வளைளயிற் றவர்களோடு வரும்விளை யாட்டென்ருலும் -விளைவன தீமையேயாம் என்பதை உணர்ந்து வீரன் 279ー *r * * *,* m + உளைவன இயற்றல் ஒல்லை உன்னிலை உணரு மாயின் இளையவன் முனியும் கங்கை ஏகுதி விரைவின் என்ருன். (10) (சூர்ப்பநகைப்படலம், 57-67) சூர்ப்பாகை சீதையைக் கண்டதும், திகைத்து வியந்ததும், அதிசயித்து அயர்ந்ததும், இருவரையும் கருதி உறுதி செய்த தும், வஞ்சம் சூழ்ந்ததும், வசை உாைத்ததும், இராமன் பரிக சித்து நகைத்ததும், அக்கொடியவள் சனகியை வெருட்டியதும், அம் மெல்லியல் வெருவி ஓடி வந்து ஒல்லையில் நாயகனைத் தழுவிக் கொண்டதும், இவ் வீான் உள்ளம் வருந்தி வெறுத்து மொழிக் ததும் மேலே குறித்த கவிகளில் முறையே காணலாம். கவிகளைக் கருத்தான்றி நோக்கிய அளவே உரைகளில் பொதிந்துள்ள உணர்ச்சி நலங்கள் உள்ளத்தில் தெளிவாக விளங் கும் ஆதலால் எதையும் ஆழ்ந்து நோக்குதல் யாண்டும் கலமாம். அறிவுக் காட்சியில் விாைந்து ஒடாமல் அமர்ந்து காண்பவர் அரிய பெரிய பொருள்களை எளிதே அடைந்துகொள்ளுகின்றனர். கதை நிகழ்ச்சிகளை வார்க்கைகளில் வார்த்துக் கவி' ஆர்த்தி யுடன் தருகின்ருர் ; அவற்றை உள்ளக் கண்களால் ஊன்றிப் பார்க்கின்றவர்கட்கு உருவ நலங்கள் யாவும் பருவ அழகுகளு டன் எ கிரே தெரிகின்றன. தெரியவே காலதேசங்கள் எல்லாம் கடந்து சரித பாத்திரங்களை நேரில் அளவளாவிச் சாலவும் மகிழ் ந்து மேலான இன்ப கலங்களை அவர் மேவுகின்றனர். உள் விழி எலையற்ற நிலையில் ஒளி வீசி யுள்ளது. அவ் ஒளியில் கானும் காட்சிகளையும் மகிழ்ச்சிகளையும் வேறு வெளியில் எங்கும் காண முடியா. காண்பார் இன்பம் பூண்பார் ஆகின்ருர். அரக்கர் என்னும் கான்சுட முளைத்த கற்பின் கனலி' எனச் சீதைக்கு இப்படி ஒரு பெயரை இங்கே கற்பித்திருக்கிரு.ர். கனலி=தீ வந்து முளைத்துள்ள வணிக யுணா வந்தது.