பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1818 கம்பன் கலை நிலை. உங்கள் குலத்தையும் ஒழித்து விடுவான் எனச் சூர்ப்பாகை இப்படிப் பயங்காட்டிப் பயன் பெற முயன்றிருக்கிருள். என் மூக்கு அரிங்து தும் குலத்தை முழுது அரிங் தீர்! என்றது தனக்குச் செய்த பிழையால் விளையும் விளைவுகளை அறி வுறுத்தினள். இனிமேல் நீ விர் யாதும் கப்பிப் பிழைக்க முடியாது என்பாள் இனி உமக்குப் போக்கு அரிது’ என்ருள். செத்துத் தொலையாமல் சீக்கிாம் வழி தேடிக் கொள்க என அவர்பால் அளி நாடியவள் போல் தனக்கு வழி தேடியுள்ளாள். நய பயங்களை வியனுகக் காட்டிச் சயங்காணக் கவித்து உழல்கின்ருள். அழகை எல்லாம் புல் இடையே உகுத்திரே! என்னும் இச் சொல் இடையே அவள் உள்ளத்தை உகுத் துளாள். கண் கொள்ளாத கட்டழகு முழுவதும் பட்டழிய நேர்க் ததே! என்று பரிந்து பரிதபித்தவளாய்த் தன்னை அறிந்து கொள்ளச் செய்திருக்கிருள். அரிய அரச குல மங்கையான எனது பெருமையை உணரா மல் என்பால் சிறுமை செய்து அதல்ை உங்கள் உயிர் அழிய தேர்ந்திர்; இந்த அழிவு நிலையிலிருந்து உங்களைப் பாது காத்தருள வேறு யாராலும் முடியாது; தேவ தேவர்களும் காக்க மாட்டோம் என்று கை ஒதுக்கி விடுவர். இவ்வாறு எங்கும் எவரிடமும் புக லிடம் கிடையாமல் மாணத்தின் வாயில் மறுகி கி.மகின்ற நம்பால் பரிவு மீதுார்ந்து நான் உருகி கிற்கின்றேன். எனது உரிமையை உணர்ந்து உயிர் உய்ந்து கொள்க. என்னை உயிர் நீர் காக்கின், யான் காப்பென். தன்னை இவ்வாறு அவள் காட்டியிருக்கிருள். காம வேதனை யால் கடுக் துயரடைந்துள்ள அவளை ஆதரித்துக் கொண்டால் இராவணனிடம் போய் யாதும் சொல்லாமல் அருள் புரிவதாக இராமனிடம் இங்கனம் அவள் உறுதி மொழி கூறினுள். தன்னைக் கைவசம் செய்து கொண்டால் உய்தி உண்டு; இல்லையாயின் தப்பாமல் செத்தே போவீர் என்று பித்தேறி அப் பேதை பேசியிருக்கும் வாதங்கள் காதல் கனிந்து வந்துள்ளன. பல வகையான அன்பு:கலங்களும் இன்ப ஊதியங்களும் தன் குல் உளவாம் என மேலும் பன்னி வினே புலையாடு கின்ருள்.