பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1832 கம்பன் கலை நிலை கொடியவர்களாகிய உங்களோடு கூடி வாழ்வதாகப் பாசாங்கு செய்தேனே யல்லாமல் உண்மையாக யாதும் பேசவில்லை. மான முடைய நான் ஈனமடைந்து வாழ்வேனே? உங்கள் மன நிலை களையும் செயல்களையும் பரிசோதிக்கவே காதலுடையவள் போல் இதுவரையும் இங்கே வாதாடி நடித்தேன். மன்மகனேயும் தேவர் களையும் மதியாக நான் புல்லிய மனிதர்களாகிய உங்களை ஒரு பொருளாக மதிப்பேனே? தனியே வந்தேன் என்று எண்ணி என்னைத் தொட்டுப் பிடித்து மான பங்கம் செய்து விட்டீர்கள் ; இப்பொழுதே உங்களுக்கு எமனைக் கொண்டு வருகின்றேன் ; + 7. கொஞ்சம் கில்லுங்கள் ' என்று சொல்லிவிட்டு அக் கொடியவள் தென் திசை நோக்கி விாைந்து சென்ருள். அவளுடைய பேச்சு நடத்தைகள் எல்லாம் வெகு விசித் திரங்களாய் வேகித்து கிற்கின்றன. மானம் இழந்து ஆனவரையும் மறுகிப் பார்த்தாள் ; இவர் யாதும் இசையாது போகவே அவள் மாறி விசை மீறினள். வெட்கம் கெட்டவள்; வெய்ய காமி ' என்று இவர் எண்ணிவிடலாகாதே ' என்று மேட்டிமையாய் அவள் ஏற்றம் காட்ட நேர்ந்தாள். தான் இது வரை கண்ணிகின்ற தெல்லாம் வெறும் நடிப்பே உள்ளத்தைத் சோதிக்கச் செய்த கள்ளமே என அக் கள்ளி புனைந்து வனைந்து பொதிந்து பேசி யிருக்கும் சாதுரியம் கினேந்து வியந்து கொள்ளவுரியது. பெண்கள் சுபாவமும் இதில் கண்கள் காண வந்துள்ளது. தான் விரும்பின வன் கன்னே வெறுத்து விடின், அவன் வலிந்து காதலித்ததாக இகழ்ந்து பேசி எள்ளித் தள்ளியது போல் போலிப் பாவனை செய்து லிேத்தனம் காட்டுவதில் மகளிர் மிகவும் கை தேர்ந்தவர். அவரது கெஞ்சச் குதுகளும், வஞ்சச் சாகசங்களும், வாது மொழிகளும் யாதும் அளவிடலரியன. யாரும் அஞ்சத் தக்கன. மங்கையர் மாய வஞ்சம் மாயனும் அறிய மாட்டான்: இங்கெவ்ர் அறிய வல்லார்? இனியவர் போல நின்று தங்கையில் அமைந்த பேர்க்குத் தனங்கையில் அமையத் தந்தே அங்கவர் உயிரை வாங்கி அயலிடம் அளிப்பர் அம்மா! இம்மாதிரியான பழிப்பிலும் இளிப்பிலும் அவர் விழிப் பேறி யுள்ளனர். அவரது மாய வசனங்கள் ஆய முடியாதன.