பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1856 கம்பன் கலை நிலை அருள் தரும் திறத்து ' என்றது சருமத்தின் பொருள் தெரிய வந்தது. எவ்வுயிர்க்கும் இாங்கி யருளும் கண்ணளியே புண்ணிய நீர்மை ஆதலால் அந்தக் கருணையுடையது அறம் என கின்றது. அதன் எதிரே மறம் மாண்டு படுகின்றது. இாக்கமற்ற கொடிய பாவிகளாய் இருந்தமையால் அாக்கர் மடிந்து அழிந்து இழிந்து ஒழிந்தார் என அந்த அழிவு கிலேயைத் தெளிவாக விளக்க அறத்தை எடுத்து இவ்வாறு காட்டினர். அறன் அன்றி வலியது உண்டாமோ ? இதில் ஒகாா வின எதிர்மறைப்பொருளாய் இல்லை என்பதை உணர்த்தி கின்றது. அறனே வலியது ; அதன் எதிரே எவ்வலி T யும் எளியதாய் இழிந்து படும் என்க. உடல் வலியும் படை வலியும் மிகுந்து, அரிய பெரிய செல் வங்களை அடைந்து, எவ்வளவு செழிப்புடையாாய்ச் சிறந்திருக் தாலும் அறம் இல்லையாயின் அவர் பரிதாபமாய் இழிந்து அழித்து படுவர் என்பது தெளிந்து கொள்ள வந்தது. தருமமே பலம் : தருமமே சயம் என்பது கருத்து. இராமன் ஒருவன் கனியே கின்ற பல்லாயிரக் கணக்கான அாக்கர் திரள்களை எளிதே அழித்தொழிக்கின்ருனே ! என்னே இது ? என அதிசயமடைந்து வியந்து கிற்கின்றவர்க்குத் தருமத் தின் மருமத்தை இங்கனம் கிறந்து காட்டியிருக்கிரு.ர். இராமன் கருமகுணசீலன் ஆதலால் அவன் எ கிரே பாவி களான அாக்கர் தாமாகவே ஆவி யழிந்து போகின்ருர். “The moral is to the physical as ten to one.” (Napoleon) ee தேக பலத்திலும் கரும பலம் பலமடங்கு உயர்ந்தது.” எனச் சிறந்த போர்வீாளுகிய நெப்போலியன் இப்படி உரைத் திருக்கிருன். வீரமும் சீலத்தை வியந்து கொண்டாடுகின்றது. படைவீரர்களும் அறந்தழுவி கின்ற அளவே வென்றியுடை யாாய் விளங்கி வருவர் என்ற கல்ை மறத்துறையிலும் அறத் தின் திறம் அறியலாகும். அறம் இன்மேல் யாவும் குன்றும். ' என்பி லதனே வெயில்போலக் காயுமே அன்பி லதனே அறம்." (குறள், 77)