பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1859 கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் - என இராமனே இங்கே இங்கனம் குறித்தது, கலைதெரி புலமையோடு சிலைதெரி வீரமும் தலைமையான கிலைமையில் இக் குலமகனிடம் குலாவியுள்ளமையை வியந்து. கலைக் கடலைக் கடங் தவன் பகைக்கடலைக் கடந்து வருகின்ருன். திரிசிரா எதிர்ந்தது. o இவன் கானுடைய தம்பி. துளடணனுக்கு இளையோன். போர் முறைகளில் நன்கு கைதேர்ந்தவன். மூன்று தலைகளே யுடையவன் ஆதலால் திரிசிரா என்னும் காரணப் பெயரோடு சிறந்து கின்ருன். மாயவிஞ்சைகளில் மிகவும் வல்லவன். அத்தலைத் தானேயன் அளவில் ஆற்றலன் : முத்தலைக் குரிசில் பொன்முடியன் ; முக்களுன் 299/ கைத்தலைச் சூலமே அனேய காட்சியான் : வைத்தலைப் பகழியான் ; மழைசெய் வில்லியான். இவனுடைய ஆற்றலும் தோற்றமும் எற்றமும் இவ்வாறு வருணிக்கப் பட்டுள்ளன. சூலம் மூன்று கவடுகளை யுடையது ஆதலின் அத்திரிசூலம் இத் திரிசிாாவுக்கு உவமையாய் வந்தது. கிரி=மூன்று. சிசம்=தலை. சாதாரணச் சூலத்தைக் குறியா மல் முக்களுன் கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் என் றது இவனது சத்துரு சங்காரத்தையும் வித்தகத்திறலையும் விளக்கி கின்றது. சேனைத் தலைவர்கள் செத்து விழவே இவன் சீறி எழுத்து தன் தானகளோடு தேரைச் செலுத்திப் போர் முகம் புகுத்து இராமனை நேர்முகமாய் வளைந்து கொண்டான். அன்னவன் நடுவுற ஆழி ஊழியீது என்னவந்து எங்கணும் இரைத்த சேனேயுள் つ933 தன்னிகர் வீரனும் தமியன் வில்லினன் துன்னிருள் இடையது ஒர் விளக்கில் தோன்றின்ை. --- (கான் வதைப்படலம், 114) ஊழிக் கடல்போல் பொங்கி வந்த சேனை வெள்ளத்துள்ளே கம் வள்ளல் அகப்பட்டுக் கொண்டதைக் கவி இப்படி விளக்கி யிருக்கிருர், தன் நிகர் வீரன் என்றது தலைமை தெரிய வந்தது.