பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1862 கம்பன் கலை நிலை அம்பு செய்த அழிவு கிலையை இது எளிது தெளிவுறத்தி யது. வஞ்சன் மாண்பிலன் என்றது அவனது கெஞ்சின் ைேம யையும் சிறுமையையும் விளக்கியது. பொய்க்கரி, படு சூழ்ச்சியுடைய கொடிய தீயவன் மெய்யான சாட்சி போல் பேசும் வெய்ய பொய்ச் சொல்லை நம்பி அரசன் நீதி கெடு கின்ருன். அது அவனது அரசுக்கு அவலம் ஆகின்றது; வாதியும் உரிய வழக்கை இழந்து கொடிய துயரங்கள் அடைகின்ருன்; ஆகவே பொய்க்கரி பெரிய பாதகமாய் விளைந்து பேசியவன் குடியை காசம் செய்கின்றது. வளம் பெற்று வளர்ந்திருந்த செல்வக் குடியும் அப்பாபத் கால் இருந்த இடமும் தடத் தெரியாமல் அழித்து போதலால் செழித்துக் கொழுத்து கின்ற அரக்கர் குழாத்தை அழித்து நீக் கிய பகழிக்கு அது உவமையாய் வந்தது. பொய்ச் சாட்சி மிகவும் கொடியது; அதனே மனிதன் யாதும் மருவலாகாது என்பதை இவ்வாறு விசயமாகக் கவி உணர்த்தி யருளினர். மொய்த்த மீன்குலம் முதலற முருங்கின மொழியில் Géolo பொய்த்த சான்றவன் குலம்எனப் பொருகனே எரிய உய்த்த கூம்புடை நெடுங்கலம் ஒடுவ கடுப்பத் தைத்த அம்பொடும் திரிங்தன சாலமீன் சாலம். (வருணனே வழி வேண்டு படலம் 25) இாாமபாணத்தைக் கடலில் ஏவிய பொழுது அது பட்ட பாட்டைக் குறித்தபடியிது. பொய்ச்சாட்சி சொன்னவன் குலம் எரிந்தது போல் கடல் எரிந்தது எனக் காட்டியுள்ள காட்சியைக் கருதிக் காண்க. பொய்க்கரி குலக்கேடு செய்யும் என்பதை இவ் வாறு விளக்கி யிருக்கிருர். முன் குறித்ததற்குப் பின் வந்துள்ள இது பெரிய வியாக்கியான மாய் விரிந்திருக்கின்றது. தனியே பொய் பேசுவதே குற்றம். திே மன்றம் ஏறிப் பொய்யாகச் சாட்சி சொல்வது பெரிய தீமை ஆதலால் அதனைச் செய்யலாகாது என அறிவுறுத் தினர். பொய்க்கரி போகன் மின்! (சிலப்பதிகாரம்) என இளங்கோவடிகள் வழங்கியுள்ளதும் ஈண்டு எண்ணத்தக்கது.