பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1876 கம்பன் கலை நிலை -- வில் முரிந்ததைக் குறித்தோ, வேறு யாதொரு துணையும் இன்றித் தான் தனியாய் கிற்றலை கினைந்தோ உள்ளத்தில் எள் அளவு கவலையும் இராமன் கொள்ளவில்லை என்பதை இதல்ை அறிகின்ருேம். சின்னம்= சிதைவு, முறிவு. சிந்தியான் என்றது சிந்திக்க வேண்டிய அபாய நிலையைத் தெளிவுறுத்தி கின்றது. எல்லை மீறிய அல்லலிலும் உல்லாசம் உலாவுகின்றது. வேறு வில் வந்தது. எந்த வீானும் நெஞ்சம் கலங்கி கிலை குலையும்படி நேர்க்க ஆபத்தில் இந்த விசன் யாதும் கலங்காமல் போர் முகத்தில் கேர் முகத்து கின்றுள்ளான். ஒடிந்த வில்லை உல்லாச வினேகமாய் அயலே எறிந்துவிட்டுத் தனது வலது கையைத் தலைக்கு மேலே பின்புறம் நீட்டினன். நீட்டவே உடனே ஒரு புதிய வில் அதிசய மாகக் கையில் வந்தது. அந்த வில்லைத் தந்தது யார்? கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன். பாசுராமனிடம் பண்டு பறித்த வில்லை வருணன் கையில் இராமன் அப்பொழுது தந்து வைத்தான்* ஆதலால் அகனே ஈண்டு அவன் கொண்டுவந்து கொடுத்தான். கொடுத்தவனையும் கொண்டவனையும் கருதி நோக்கும்படி சரிதம் உரிமை செய்துள் ளது.சீதையை மணந்து புது மணக்கோலத்துடன் கிரு வயோத் தியை நோக்கி வருங்கால் இடையே வந்த தடையாய் மறித்துப் போராடித் தோல்வியடைந்து தன் வில்லை இழந்து வழுவோடு அம்மழு வாளி போன பொழுது அச்சிலையை இம் மான விசன் வானவர் குழுவுள் வருணனிடம் சேமமாக வைத்திருக்கும்படி தக்தருளினன். அதனை அவன் நன்கு பாதுகாத்து வைத்திருந் தான். இராமன் வனவாசம் வந்த பொழுது அந்த வில்லை அகத் திய முனிவரிடம் தந்து இவ்விரனுக்கு நேரே கொடுத்தருளும் படி குறிப்பித்து கின்ருன். அம்மாதவர் கொடுத்ததை ஆதா வுடன் வாங்கி அயல் வந்த பின் மீண்டும் வருணனிடமே இச் சுங் தான் தந்து வந்தான். ஆபத்து நேரும் பொழுது இவ்வில்லை ஒல்லையில் உதவியருள் ' என்று சொல்லி வந்தபடியே ஈண்டு இந்த நல்ல சமையத்தில் அவன் கொடுத்தருளின்ை. ---

  • இந்துால் பக்கம் 1284, வரி 23 பார்க்க.