பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1888 கம்பன் கலை நிலை தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள். சிதையின் மகிமையைச் சொல்லத் தொடங்கினவள் காமரம் முரலும் பாடல் என முதலில் அவளது சொல்லின் இனிமையை மெல்லச் சுட்டி விட்டு இவ்வாறு எல்லை கட்டிப் பேசியுள்ளாள். காமாம்=தேவ கானத்துள் ஒரு பண் விசேடம். கள் என் றது கேனை. தாமரை மலரில் எருந்தருளியுள்ள இலட்சுமியும் தாதியாயிருத்தற்குத் தகுதி யில்லாதவள்; அவ்வளவு அதிசய அழகினள்; திவ்விய கிலையினள்; அவளுடைய உருவ எழிலையும் பருவ கிலையையும் உரைகளால் நான் எவ்வாறு வாைந்து சொல்ல முடியும்? ' எனக் கனது ஆற்ருமையை வெளியிட்டுருக்கிருள். சொல்ல முடியாத ஒரு அற்புத சவுந்தரியை நான் இங்கே சொல் லத் தொடங்கியது பெரிய மடமை என்பாள் ஏழைமைப் பாலது என்ருள். அதிசய அழகைத் துதி செய்ய அவையடக்க மாயது. யே நேரே போய்க் கண்டு களித்துக் கொண்டு வாவுரியது: அக்க அரிய இன்ப உருவை நான் உாையால் சொல்லுவது புல்லி தாம் என்பது குறிப்பு. குறிக் கோளோடு கூரிய சீரிய விாக மொழிகளை வாரி வீசி வெய்ய மையலை விளைத்து வருகின்ருள். மஞ்சு ஒக்கும் அளக ஒதி; மழை ஒக்கும் வடித்த கூந்தல். என உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையும் உச்சமாக வருணிக்கக் தொடங்கிள்ை. வார்க்கைகள் ஆர்க்கி மீதுார்ந்து வருகின்றன. 'அவள் கூந்தலை முடித்திருந்தால் கார்மேகம் போல் கனிந்து தோன்றும் , அவிழ்த்து விட்டிருந்தால் மழை பொழிதற்குக் கால் இறங்கிய நீலமேகம் போல் கிலவி மிளிரும். அவளுடைய கண்களின் அமைதியும் அழகும் எண்கள் கடந்தன. இப்படி ஒரு உருவத்தைப் பிரமன் எப்படிப்படைத்தானே ? சிவனுடைய நெற்றிக் கண்ணுல் எரிக்கப்பட்டு மன்மதன் இறந்தான் என்பது மடத்தனம் ; இந்தப் பேரழகியை அவன் நேயே பார்த்தான் ; பேராசை கொண்டான் ; அந்த ஆசை நோயால் அவன் செத் தான். ஈசன் கண்ணுல் வெங் கான் என்பது பொய். தேவ மங்கையர், காக கன்னியர் கந்தருவ சுந்தரிகள் எவரும் இவளது காலமுக்கும் ஈடாகார் எந்த உலகத்திலும் இந்த எழில் ஒளியை நீ காண முடியாது. அண்ணு அவளுடைய அவயவ அமைதி