பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1891 என்றும் காகு த கட்டழகியை நான் உனக்குக் காட்டி னேன்; இனிமேல் அவளைத் தவிர வேறு எவரையும் நீ கண் எடுத்துப் பாாாய்; அதல்ை உனக்கு மாத்திாம் நான் கல்லவள் ஆனேன்; மதினிமார்கள் எல்லார்க்கும் நான் பொல்லாதவளாய் நேர்ந்தேன் என்று நெஞ்சு நொந்துகொள்ளுகின்ருள். வள்ளலே! உனக்கு நல்லேன்; நின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன். பேச்சுகளுள்ளே பிழைபாடுகள் விளையாடி வருகின்றன. இராவணன் மனைவியாகிய மண்டோதரி முதலானவர்களு டைய தாலிகளை அறுக்கத் தொடங்கியிருக்கிருள் ஆதலால் அக்த நீலி வாயில் இப்படி வார்த்தைகள் தாமாக வந்திருக்கின்றன. தன் கருத்துக்களைத் திருத்தமாகச் சொல்லப் புகுந்தாள்; மொழிகள் இவ்வாறு விருத்தமாக வெளி எழுந்தன. எங்ங்னம் வைத்து வாழ்தி பிழைக்கல் ஆற்ருய், கேடு சூழ் கின்றேன் என்னும் இவ் வார்த்தைகள் கெடு குறியுடையனவாய் அவள் அறியாமலே வந்துள்ளன. ஆயினும் கவி அறிந்தே தத்துள் ளார் என்பதை காம் அறிந்து கொள்ளுகின்ருேம். மதி நலத்தோடு பலவும் சூழ்ந்து அதி சாதுரியமாக அவள் பேசிவரினும் விதி புகுந்து உள்ளே வேலை செய்து வருகின்றது. தான் வெய்ய மையல் கொண்டு வெந்துயர் அடைந்துள்ளவள் ஆகலால் அண்ணனுக்கும் அதனே வேகமாக எற்றிள்ை. நான் கண்டு தந்த சீதையை நீ கொண்டு வந்து மகிழ்வதோடு எனக்கும் இராமனைத் தந்தருள வேண்டும் என வேண்டினள். யான்கொண்டு ஆடும் வண்ணம் இராமனேக் கருதி. இந்த வேண்டுகோளை அவள் செய்துள்ளது வியப்பாகின்றது. காம ஆசையில் கண் அழிந்துள்ளவர், கள் அருந்தினவர் போல் எள்ளல் எதையும் காணுமல் உள்ளதை வெளியிட்டு விடுவர் என் பதை இவ்வுரை தெளிவாக்கி யுள்ளது. அண்ணனிடம் தங்கை இவ் வண்ணம் பேசி யிருக்கிருள். தான் இராமனைக்காதலித்த உண்மையை இது வரையும் மறைத்து வைத்திருந்தவள் இப்பொழுது மதி மறந்து உாைத்து விட்டாள்.