பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1893 ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் இருபதும் படைத்த செல்வம் எய்துவது இனி நீ எங்தாய்! தேவரும் வியந்து போற்றும்படியான சிறந்த கீர்த்தியோடு பிறந்திருக்கின்ற நீ உன் பிறப்பிற்கு ஏற்ற அற்புத செல்வத்தை அடைய நேர்த்துள்ளாய் ஐயனே! என்று ஆவல் மீதுார ஆசையில் இவ்வாறு எவி யிருக்கிருள் சீதையைப் பெற்ற பொழுதுதான் நீ பிறந்த பயனை உற்ருய்! என அவனுடைய உள்ளம் உருகி ஒட இவள் உரையாடியுளள திறம் உணருக்தோறும் வியப்பை விளைத்து வருகின்றது. ஒவ்வொரு சொல்லும் இராவணன் உள்ளத்தில் பாய்ந்து காம இச்சையைக் கடுமையாக விளைத்து வங்கமையால் அவன் மதிமயங்கி மையல் மீதார்ந்து கொடிய மோகியாய்க் க டி து மாறினன். இவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் உள்ளம் பாவ சமாய்த் துடித்தது. தங்கை முக்கு அறுபட்டு வந்ததையும், கான் முதலிய சேனைகள் யாவும் இறந்து பட்டதையும் வேறு எல்லா வற்றையும் மறந்து விட்டான். சீதையையே கினைந்து கினைந்து கெஞ்சம் உருகினன். காம பாவசனய் அவன் நிலை மாறியுள்ள நிலைமையைக் கவி மிகவும் அதிசய வினேகமாய்க் காடடி யிருக் கிருர். அந்தக் காட்சியை நாம் கண் ஊன்றிக் காண வேண்டும். கரனேயும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து கின்ருன் உசனேயும் மறக்கான் உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி یا پایه گق( அரனேயும் கொண்ட காமன் அம்பினுல் முன்னைப் பெற்ற வரனேயும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்தி லாதான். (1) சிற்றிடைச் சீதைஎன்னும் காமமும் சிங்தை தானும் உற்றிரண்டு ஒன்ருய் கின்ருல் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன ー了d_うC மற்ருேரு மனமும் உண்டோ? மறக்கலாம் வழிமற்று யாதோ? T கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடகக லாமோ? (2) மயிலுடைச் சாய லாளே வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான் ご」っ「f அயிலுடை அரக்கன் உள்ளம அவ்வழி மெல்ல மெல்ல வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல் வெதும்பிற்று அன்றே.