பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1677 உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட 285ஆஇரைத்த காதலர் ஏகிய இன்னலர் திரித்த கோலினர் தேமறை பாடினர் நிருத்தம் ஆடினர் கின்று விளம்புவார். (1) தோன்றல் நீ முனியின் புவனத்தொகை தகமன்று போல்வன முப்பது கோடிவந்து ஏன்ற போதும் எதிரல என்றலின் リ3 so சான்று வேதம் தவம்பெரு ஞானமே, o (2) தமக்கு அபயம் அருளிய இராமனை மாதவர் இவ்வாறு மகிழ்ந்து கொண்டாடி யுள்ளனர். இவ் விர வள்ளல்பால் அவர் கொண்டுள்ள நம்பிக்கையும் மதிப்பும் உரைகளில் தெளிவாய் வெளியாகி யிருக்கின்றன. o மூன்று உலகம் அன்று முப்பது கோடியே பாயினும் இவன் வென்று அருளுவான் என்று அவர் உள்ளம் களித்துள்ளனர். பொல்லாதவர்களால் நேர்ந்த அல்லல்கள் எல்லாம் இனிமேல் தமக்கு இல்லையாம் என எண்ணி மகிழ்ந்து புண்ணிய நெறிகளை நன்ன விழைந்தனர். தண்டகவனத்தில் தங்கியிருந்தது. இங்ங்னம் உவந்து கின்ற முனிவர் இாமனை அங்கேயே அமர்ந்திருக்க வேண்டினர். இப்பெருமானும் இசைந்து அயலே ஒரு மலைச்சாாலில் தனியே பன்னகசாலை அமைத்து மனைவி தம்பிகளுடன் வன வாசம் செய்தான். அவ்வன வாசிகளுக்கு யாதொரு தீதும் கோவண்ணம் கவனமாகக்கருதியிருக்கமையால் மாதவரின் பாது காப்பாகவே அவ் வாழ்க்கை மருவி கின்றது. சீதையின் சிவகாருணியம். o தனது அருமை நாயகன் முனிவர்களுக்கு அருளிய வாக்குறுதிகளைச் சிதை நெடிது சிந்தித்து வந்தாள். அாக்கரை வேர் அறுப்பன் என்ற அவ்வார்க்கை அம் மெல்லியல் உள்ளத்தை வருக்கி வந்தது ஒரு நாள் இரவு கனியே. இருக்கும் பொழுது கணவனைக் கனிந்து நோக்கி நாகா காங்கள் கவசிகளிடம் உறுதி கூறியது பெரிதும் எனக்குக் கவலை கருகின்றது. நமக்கு