பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1912 கம்பன் கலை நிலை. தெய்வக் திருவின் அவதாரம், நல்ல புண்ணிய உருவம், என எல்லாரும் எண்ணிப் போற்றுகின்ற சீதையை இங்கே கிரு தர் தீவினை என்ற குறிக்கிருப்பது வருவதை ஒர்ந்துகொள்ள வந்தது. வந்துள்ள அவதார மருமம் சிங்கை தெரிய நேர்ந்தது. இவளுடைய வடிவழகு அசக்கர் குலம் அடியோடு அழிய அமைந்துள்ளமையால் உருவோ' எனப் பரிதாபமாய் மறகிக் குறித்தான். சீதை பிறந்தாள இலங்கை அழிந்தது என்னும் பழ மொழியின் பொருள் விழி தெரிய |கின்றது. இக் குலமகளை விரும்பினல் உன் குலம் நாசம் அடையும் என முடிவினை முடிவாக உாைத்தான். காதலித்து வந்துள்ள பொருளில் அவனுக்கு அச்சமும் வெறுப்பும் உண்டாகும் படி இவ்வாறு குறிப்போடு கூறினன். உனது மயலையும் செயலையும் கினேந்து நான் அஞ்சுகின்றேன். கொடிய நஞ்சை இனிய அமுதம் என்று கவருக எண்ணி வாரிக் குடிக்கச் சென்றவனைப்போல் நீ இங்கே வந்திருக்கின்ருய். உன் கிலைமை என் நெஞ்சை வருத்துகின்றது. மதிகேடான செயல் என்று மறுகித் துடிக்கின்ற என்னை அந்த அழிவு கேட்டுக்கு உதவிசெய்ய வேண்டுகின்ருய் ! நாசம் என்று நன்கு தெரிந்த சேத்திற்கு கான் எப்படி இசைவேன்? நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் கன்ருே? தன் னே உதவி புரிய வேண்டிய இராவணனை நோக்கி மாரீசன் இவ்வாறு வினவி யிருக்கிருன். உருவக வசனங்கள் துணுகி உணன வுரியன. உண்டவுடனே கொல்லுகின்ற நஞ்சைக்குருடன் ஒருவன் அறியாமையால் குடிகக நேர்ந்தான்; அப்பொழுது அருகே கின்ற ஒர் அருளாளன், அப்பா! அது சஞ்சு; அதனேக் குடியாகே' ' என்று தடுத்து கிறுத்தியதைப் போல் நான் இங்கே உனக்கு எடுத்து உணர்த்துகின்றேன்; உண்மையை உணராமல் .ே கடுத்து கிற்கின்ருய். நஞ்சைக் குடிக்கலாமா? என்ருல் குடி என்று சொல்லிக் கொல்லத் துணிகின்ற பொல்லாத் துணைவன் நான் அல்லன்: அதற்கு மகோதரன் முதலாயினரைப் பார்த்துக் கொள் என்னும் குறிப்புகள் இதில் கொனித்திருக்கின்றன.