பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1922 கம்பன் கலை நிலை எல்லாரையும் மயக்கி மையலுறுத்தும் அவா.த வல்லமையை யாரும் என்னும் சொல்லால் துலக்கினர். எத்தகைய விமரும், வித்தக மேதைகளும் பித்தேறி விழும் பிழை தெளிய வக்கது. கரிய நீலஒண் கட்பொது மாதரைக் கண்ணுற்று அரிய மாதவ வேடம்விட் டணங்கவர் அநேகர்: உரிய மாநிதி அனைத்தும் ஈந்து இரப்பதற்கு உன்னிப் பரியு மாதவ வேடமுற்று அகன்றவர் பலரே. (கோளத்திப் புராணம்) சிறந்த தவசிகளும், உயர்ந்த செல்வரும் விலைமாதர் வசமாய் விழுந்து தம் நிலை கிரிந்து போனமையை இதல்ை உணர்ந்து கொள்ளுகின்ருேம். தவ வேடம் பறித்தும், அவ் வேடம் கொடு த்தும் ஆடவரை அலைய விடும் நிலையை இங்கனம் அழகாக விளக்ெ புள்ளார். பொருள் கவர்ந்து மருள் புரியும் புலைநிலை புலயைது. விலை மாதரைக் குறித்து இக் காட்டுக் கவிகள் பாடியுள்ள பாடல்கள் ஒரு தொகை நாலாய் வரும்படி அவ்வளவு பெரிதாய் விரிந்திருக்கின்றன. அவரது இயல்புகளையும் செயல்களையும் நம் கவி பலவகை கிலைகளிலும் சுவையாக விளக்கி வருகிரு.ர். அவருடைய உள்ளம் தெரியாமல் உருவ அழகில் மயங்கி உணர்விழந்து போனவர் பலவும் இழந்து படுதுயர் அடைவது போல், அம் மாயமான விழைந்து தாய குல மக்கள் தீய துன்பங் கள் அடைய நேர்ந்துள்ளமையை முன்னதாக ஒர்ந்து கொள்ள இன்ன வாறு நன்னயமுடன் உாைக்தார். சிதை மானைக் கண்ட த. வஞ்சமான அம் மான் நெஞ்சம் துணிக் த பஞ்சவடி சேக் தள் புகுந்தது. அப் பொழுது சீதை தனியே ஒரு இனிய பூஞ் சோலையில் மலர்க்க பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள். அந்தப் பூம் பொழில் அருகே வந்து மருண்ட பார்வையோடு அது வெருண்டு கின்றது. அதனைக் கண்டதும் வியந்து நோக்கிள்ை. மலர் கொய்வதை மறந்து விட்டு அம் மானின் உருவ கிலையையும், எ ழி ல் அமைதியையும் விழி இமையாமல் உவக் து பார்த்து, உடனே தன் நாயகனிடம் வந்து தான் கண்ட அதிசய மானின் அழகு நிலையைப்புகழ்ந்த கூறி அகனப் பிடித்துக்கொடுக்கும்படி வேண்டினுள் சானகி விழைக்க வேண்டியது வினே விளைவாயது. H