பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1924 கம்பன் கலை நிலை நம் கன்னங்களின் வேறுள காணுதும் என்றது ஈம்முடைய காதுகளில் எவ்வளவோ வேறுபாடான பொருள்களையும் மாறு பாடான உருவங்களையும் கேட்டு வருகின்ருேம்; இன்னமும் எவ் வளவோ கேட்க நேரும் என்றவாறு கன்னம்=செவி. பொன்னின் ஒளி மேனி பொருங்திய ஏழ் அன்னங்கள் பிறந்தது அறிந்திலேயோ? என்றது முன்னம் நிகழ்ந்த புராண சரிதத்தைக் குறித்து வக்கது. பதுமம், அாவிக்காக்கம், சீரம், சுலோசனம், குருபித்து, சுபித்து, எமம் என்னும் நாமங்களுடையனவாய் எழு அன்னங்கள் க H ■ # = HH 畢 m மானச மடுவில் பொன்னிறமாய்த் தோன்றியிருந்தன. அன்னவை இன்னவாறு இங்கே குறிக்க நேர்ந்தன. களனுக்குத் தாதாய் கின்று கமயத்தியை மணம் புரிவித்த அன்னமும் பொன்னிறமுடையது; பேசும் ஆற்றல் வாய்ந்தது. :இக் கிறம் உனக்கு எவ்வாறு அமைந்தது? " என்று அக் குல மகள் வினவிய பொழுது அது சொன்ன பதில் அயல் வருவது. மலர்மேல் அயன் மான த வாவியினுள் பொலன் மெல்லிதழ் பூத்த செழுங்கமலம் நலனர் வளையம் பலநாளும் அயின்று உலவா தொளிர் பொன்னிறம் உற்றனமால். (நைடதம்) இன்ன வண்ணமான தெய்வீகப் பிறவிகளுள் இம் மானும் ஒன்ருக இருக்கலாம் என்று கருதி இராமன் இலக்குவனுக்கு ஆறுதல் கூறினன். நம்பி தம்பியோடு இங்ானம் உரையாடுங்கால் கங்கை விரைந்தாள். விேர் இருவிரும் இவ்வாறு வாதாடிக் கொண்டிருந்தால் அது ஒடிப் போய் விடுமே!’ என்று சீதை துடித்தாள். நாயகன் மானைப் பார்க்க விரைந்தான். தம்பியும் உள்ளம் வருக்கி உடன் தொடர்ந்தான். - அனையவள் கருத்தை உன்ன அஞ்சனக் குன்றம் அன்ன்ை ஆனயிழை காட்ட தென்று போயின்ை பொருத சிந்தைக் ங்க கனைகழல் தம்பி பின்பு சென்றனன், கடக்க ஒண்ணு வினை என வந்து கின்ற மான் எதிர் விழிக்க தன்றே. ( 1)