பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1926 கம்பன் கலை நிலை கடக்க ஒண்ணுமை மானையும் அடக்கி கின்றது. இந்த இனிய துணைகளைப் பிரித்துக் கொடிய துன்பங்களைச் செய்ய வந்துள்ள மாரீசனும் இங்கே சாக நேர்ந்திருத்தலால், கடக்க ஒண்ணு வினே வயத்தனய் அவனும் கட்டுண்டு கிற் கின் முன் வினை புகுந்து வேலை செய்யும் வித்தக நிலை வியப்பு மிக வுடையது. கினேவையும் கடத்து கெடிது நீண்டுள்ளது. இராமன் வியந்து நின்றது. தீவினை கண் விழித்துப் பார்ப்பது போல் தம்மை எதிர் நோக்கி விழித்த அந்த மானே இராமன் மிகவும் ஆர்வத்தோடு உவந்து பார்த்தான். அதன் வஞ்சனையை யாதும் நெஞ்சம் தெரிங் திலன். பொல்லாத அதனை நல்லது என்று எண்ணி வியந்து புகழ்ந்து கொண்டு மகிழ்ந்து கின்ருன். நோக்கிய மானே நோக்கி துதி இழை மதியின் ஒன்றும் தாக்கிலன்' என்றது சீர்தாக்கி ஆகாய வேண்டிய இந்த இடத்தில் யாதும் ஆராயாமல் ஆர்வ மீதார்த்து அயர்ந்து கின்றமைக்கு இாங் கியது. தாக்குதல்=உண்மை நிலையை ஊன்றி நோக்குதல். பொருளைத் துலாக் கோலால் தாக்கி கிறை அளவு நோக்கல் போல் எதையும் குறையற நோக்கி யாண்டும் உண்மை காணும் உத்தம உணர்வின ன் ஈண்டுத் தன்மை திரிந்து தளர்ந்து கின்ருன். நுதி இழை மதி எ ன் ற த இராமனது அதி மேதையை உணர்த்தி கின்றது. நதியும் இழையும் மதிக்கு அடைகள் ஆயின. கூரிய நண்மையும், ஆராயும் ஒண்மையும் சீரிய கிலையில் வாய்ந்துள்ள பேரறிவு யாதும் ஒசாமல் அமர்த்து கின்றது. இயற்கையான மதி மதுட்பத்தோடு, கலைகள் பலவும் பயின்று எவரும் கிகரில்லாத தலைமை அறிவாளியாய்த் தழைத்து ஒளிர் கின்ற இக் குலமகன் அப் புலை மிருகத்தின் வஞ்ச நிலைமையை உணராமல் நெஞ்சு உவந்து கின்றது ஊழ்வினையின் விளேவேயாம். பேதைப் படுக்கும் இழவூழ் என்ற பொய்யா மொழியின்படி அதி மேதையான இவன் விதிவசமாய் இங்கே மதிமயங்கினன். தீய மாய மானைத் தாயது என நம்பியதோடு மீளாமல் மேலும் அதன் மேல் நேயம் மீதார்ந்து உள்ளம் உவந்து கின்ருன்.