பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 கம்பன் கலை நிலை புகழ்ந்து பேசுவதால் அதனை இகழ்ந்து யாதும் எதிர் பேசாமல் கேட்டு கின்ருன். முதிர்ந்த பாசம் உடையவன் ஆதலால் மூளு வதை நோக்கி மறுகி மீளவும் நளினமாக மொழியலான்ை. அது பொன் மயமானது; அதிசய அழகுடையது; அதனைக் கண் குளிரப் பார்த்தாயிற்று; இனிமேல் ஈண்டு நிற்பது ஏன் ? மீண்டு போவோம்; வாருங்கள்' என்று இளையவன் பணிவுடன் வேண் டின்ை. அந்த மாய மானிடம் விழைவு நீளாமல் விாைந்து மீளும் படி பரிவு மீதார்த்து உறுதி கூறி உரிமை புரிந்தான். அதி விநயமாகத் தம்பி இங்ாவனம் கூறவே சானகி நாயகனை கயந்து நோக்கி 'காதா! அம்மானே எனக்குப் பிடித்துக்கொடுங்கள்; வனவாச காலத்தில் அதனேடு உல்லாசமாக விளையாடிப்பொழுது போக்கலாம்; திரும்பி ஊருக்குப் போகும் பொதும் உடன் கொண்டு போய் அங்கே தங்கைமாரிடம் காட்டி மகிழலாம் ; அதிசயமான இதனைக் கண்டால் எல்லாரும் உவந்து கொள்ளு வார்; விாைந்து பற்றிக் காருங்கள்' என்று கொஞ்சிய மொழியில் கெஞ்சி மொழிந்தாள். 'இதோ பிடித்துத் தருகின்றேன்' என்று இராமன் எடுத்து அடி வைத்தான்; அடுத்து கி ன் ற கம்பி கடுத்துத் தடுத்து, 'ஐயனே அது வெய்யது; அதன் மேல் ஆசைகொண்டு போவது அவமாம்' எனப் பாசம் கொண்டு பரிந்து மொழிந்தான். அண்ணன் இளையவனே அமைதியோடு நோக்கி, 'தம்பி! என் இவ்வாறு ஐயப்படுகின்ரு ய் உன் அண்ணி ஆவலோடு விரும் புகின்ருள்; இனிய பொழுது போக்குக்கு இதமாயிருக்கும்; இந்த அழகிய மானேப் பிடித்துக் கொடுப்பது கல்லது; இதல்ை என்ன பிழை நேரும் என்.று நீ இன்னல் உறுகின்ருய்? ' என இன்னவாறு இனிது வினவினன். வினவவே தனது மனதில் கருதியுள்ளதை ஒளியாமல் வெளி யே அவன் தெளிவாக உரைத் தான். வெய்யவல் அரக்கர் வஞ்சம் விரும்பினர் வினையில் செய்த கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்ருன் இலக்குவனுடைய உள்ளத் தெளிவையும் உறுதி கிலையையும் உணர்வு நலனையும் இவ் வுரையில் இனிது காண்ன்ெருேம். --"