பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1934 கம்பன் கலை நிலை அண்ணனை அயலே விட மனம் இல்லாமல் தானே போகக் துணிந்து இலக்குவன் டேசியுள்ள இதில் அவனது உள்ளமும் உறுதியும் உரிமையும் உலகு அறிய வெளியாயுள்ளன. செய்யத் துணிந்த காரியம் தீயது; மாயச் சூது உடையது; போகவே கூடாது என்று ஆன வரையும் தடுத்துப் பார்த்தான்; தமையன் அமையாமல் மூண்டு கிற்கும் கிலையை அறிந்ததும் கான் போய் அம் மானைப் பிடித்து வருவதாகத் துணிந்து சொன்னன். அதனை வஞ்சமாக எவி விட்டு அயலே சூழ்ச்சி செய்து கிம் பவர் எத்துணையோராயினும் அத்தனை பேரையும் தொலைத்து வெற்றி புரிந்து வேட்டைப் பொருளோடு விரைந்து வருவேன் என்றது அவனது வீர பாாக்கிாமத்தை விளக்கி கின்றது. எவ் வகையிலும் அண்ணனை வெளியே விடக் கூடாது என் அம் குறிக் கோளோடுதான் இவ்வண்ணம் கூர்ந்து கூறினன். அந்த அன்புருவம் இங்கனம் பரிந்து பேசுங்கால் சீதை இடையே விரைந்து பேசி அயலே சினத்து போயது பெருக் து பாமர் ப.தி. ஆயிடை அன்னம் அன்ள்ை அமுது உகுத்தனேய செய்ய 三 三、交 வாயிடை மழலை இன்சொற் கிளியினிற் குமுறி மாழ்கி நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்ச்ை சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சிதறிப் போள்ை. காவிய ஒவியமாய்க் கனிந்துள்ள இக்காட்சியில் பெண்ணின் இயல்பைக் கண் எதிரே காண்கின்ருேம்.

பிராண நாதா! நீங்களே போய்ப் பிடித்துக் கொடுக்க மாட் டீர்கள் போலும்?' எ ன் கண்ணிர் சிந்திப் பர்ண சாலையை

.ழி நோக்கிச் சானகி விாைந்து போயிருக்கிருள். எதற்காக இந்த அழுகை தனக்கு வேண்டியது மான்; அதனை யார் பிடித்துக் கொடுத்தால் என்ன? தன் நாயகன் கையி ஞலேயே நேரே போய்க் கொண்டு வர வேண்டும் என்ற பிடி வாதம் கொண்டது என்? இந்தச் சாதனையால் விளையவுள்ள வேதனை எவ்வளவு தன் பதியே போக வேண்டும் என்று வேண் டியது விதியின் சோதனையாய் நீண்டு ஈண்டு மூண்டு நிற்கின்றது.