பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1959 வது இயல்பு; அங்ங்னம் உயிர் கலங்கிய உள்ளக் கொதிப்பிலும் நல்ல குல மகள் வாயிலிருந்து எள்ளலான இழி மொழிகள் வெளி வாா என்பதை நம் கவி இங்கே தெளிவுறுத்தி யிருக்கிருர் பிரியை என்னும் பேருக்கு ஏற்ப அப்பேதை மறுகி உருகு கின்ருள்; இம் மேதை பரிவாய் உறுதி கூறுகின்ருன் கூறியும் தேருமல் ஆராமையால் அலமந்து சீறுகின்ருள். நீ வெருவலை! நின்றன வேறு என்? இலக்குவன நோக்கிச் சீதை உரைத்த இவ் வுரைகள் மேற் குறித்த கொடு மொழிகளுக்கு எதிர் நிலையில் கிற்கின்றன. வியை மும் நாகரிகமும் வித்தகமும் உய்த்துணாத் தக்கன. இங்கனம் வருக்கி மொழிந்து இறந்து படுவதாகச் சானகி விசைக் போகவே இளையவன் பரிந்து நொந்து எதிரே போய்க் காலில் விழுந்து தொழுது தரையை நோக்கித்தவித்துப் பேசின்ை. தாயே என் பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; கான் போய் வருகின்றேன்' என்று வாய் மறுகி மொழித்தான். 前 சொற்ற சொல்லை யான் அஞ்சுவென் என்ற தல்ை சீதை சொல்லிய சொற்கள் இலக்குவனுக்கு உள்ளத் துடிப்பை விளைத்து உயிர் மறுகச் செய்துள்ளமை உணரலாகும். 'உன் அண்ணியைக் காத்து கில்” என்று இராமன் இட்ட கட்டளையை மீறிப் போக மனம் இல்லையாயினும் தேவி சாவேன் என்று சாதன செய்து வேதனை புரிவதை கினைந்து கோதல் உழந்து போதல் துணிந்துள்ளான். வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ? என நெஞ்சு நொந்திருத்தலால் கொடிய தீவினையே மூண்டு . . வேலை செய்கின்றது; கெடிய கேடு ஒன்று கடிது வருகின்றது என அவன் துடிதுடித்திருக்கும் துயாகிலை அறியவந்தது. போகின்றேன் அடியனேன்; பொருந்தி வந்து கேடு ஆகின் றது' எனப் பின்னே விளைய நேர்ந்துள்ள துன்பத் தொடர்பை முன்னதாக இவன் வாய்மொழி இன்னவாறு முடிவுசெய்யலாயது. மாயமானக் கண்டதிலிருந்து இவனுடைய கெஞ்சத்தில் பெருங் குழப்பங்கள் கிறைத்திருக்கின்றன. எதோ ஒர் அவகேடு தொடர்ந்து வருகின்றது என்ற துளங்கி கிற்கின்ருன். அதற்கு