பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1974. கம்பன் கலை நிலை 'இவளைக் கண்டு தந்த என் இளையவட்கு என் அரசு அளிப் பன்' என்று அவன் களித்து எண்ணியிருக்கிருன். கண்டு தந்தமைக்கே இப் பரிசாயின் கொண்டு தங்தால் எப்பரிசாம் ? காணப்பட்ட பொருள்மேல் அவன் கொண்டுள்ள மோகத்தை வாய்மொழிகள் பலவகையிலும் வெளிப்படுக்கி வருகின்றன. தேவரும் குடிகளாயுள்ள .ெ டி ய தன் முடி அரசைச் சீதைக் கே உரிமையாக்கித் கான் அவளுககு அடிமையாய் அமர்ந்து வாழவேண்டும் என்று முதலில கருதின்ை; பின்பு தன் தங்கைக்கே கன்றியறிவுடன் அதனைத் தந்துவிட்டு த காம் இருவ ரும் இனித்த போகநலங்களில் திளைத்துத் தனித்திருக்கவேண் டும் என்று துணிந்தான். அாச போகங்கள் முதலிய எல்லாவற் றையும் துறந்து தனியே சீதையோடு இனிது வாழ்வதையே பேரின்ப நிலையமாக அப்பேயன் இச்சித்திருக்கிருன். இங்கனம் எண்னதன எல்லாம் எண்ணி எண்ணி மகிழ்த்து உள்ளம் களித்துக் குடிசை அருகுவாவே இக் குலமகள் தொழுது உபசரித்து ஒர் ஆசனம் விரித்து அதில் இருக்கச் செய்தாள். சீதை நெஞ்சமும் இராவணன் வஞ்சமும். பெரிய ஞான முனிவார் அதிதியாய் வந்துள்ளார் என்று கருதிச் சானகி மிகுந்த பயபக்தியுடன் வணங்கி மரியாதை புரிக் தாள். அந்த வஞ்சன் நெஞ்சம் களித்து அரிய தவசி போலவே இனிது நடித்து வாசுதேவா என்று இனிய குரலால் கனிவாகச் சொல்லிக் கையில் கொண்டுவந்திருந்த யோகதண்டம் கமண்டலம் முதலியவற்றை அயலே வைத்துப் பன்ன சாலை முன்முகப்பில் நன்னயமாக ஆசனத்தில் அமர்ந்தான். காண்டலும் கண்ணின்ர்ே துடைத்த கற்பிள்ை. என்றமையால் அம்மாயச் சங் கியாசி வரும்பொழுது சீதை அழுது கொண்டிருந்தாள் என்று தெரிகின்றது. மானின் பின் போன தன் காயகனுக்கு அபாயம் நேர்ந்துள்ளது என்று கருதி கெஞ்சம் துடித்து கிலைகுலைந்துள்ளமையால் ஓயாமல் அழுது அவலமாய் அல்லலுழந்திருக்காள். விழி ர்ே சொரிய வழி மேல் மனமாய் மறுகியிருக்குங்கால் பழிகாான் வந்தான். தவசிபோல் வந்த அவனைக் காணவே கண்ணிசைத் துடைத்துக் கைகுவித்து