பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1982 கம்பன் கலை நிலை நீங்கள் யாருடைய அருமைத் கிருமகளார்? இக்கக் கொடிய காட்டில் வந்து வினே காலம் கழிக்கின்றீர்களே! என்று பரிவுடை யவன்போல் விாகுடன் கேட்டான். மலர் வாள் தடம் கண்ணின் நீர் என்ற கல்ை பிராட்டியின் கண் அழகில் அவன் உள்ளம் பறி போய் உருகி உழந்துள்ளமை அறிய வந்தது. மூன்று அடை மொழிகள் விழிகளின் ஆன்ற அமைகி தோன்ற கின்றன. புறத்தே ஞான யோகி போல் கோலம் கொண்டாலும் அகத்தே காம போகியாய்க் க தி த் து கி,ம்றலால் சிருங்காா வசனங்கள் மருங்கோடி வந்தன. அகன்ற பரந்து செவ்வரி படர்ந்து கருமை ஒளி கனின் து வெண்மை ஒளி தவழ்ந்து வியத்தகு கிலையில் விழிகள் மலர்க் திருத்தலால் அந்த எழில் கிலையில் மனம் அழிந்து மால் கொண்டு மயங்கி மறுகி மையல் களிப்போடு உயங்கி யிருக்கிருன். காட்டு இடை அரும்பகல் கழிக்கின்றீர்! எனக் கழி விாக்க முடையவன் போல் பரிதபித்துக் கூறியது அவன் கருதி வந்துள்ள கருத்தை ஒரு சிறிது வெளியே காட்டி கின்றது. உரை வழியே உருகி ஒட்டுகின் முன். அதிசய சவுத்தரியாய் உள்ள தாங்கள் உயர்ந்த அரண்மனையில் அமர்ந்து தோழியர் பலர் ஊழியம் புரிய அரிய இனிய சிறக்க போக போக்கியங்களை அனுபவிக்க உரிய இக்கப் பருவத்தில் பாழான காட்டில் வன்து வீணே காலம் கழிக்கின்றீர்களே! இது என்ன அகியாயம்! அனனே! என எங்கியிருக்கிருன். உங்களுடைய விழுமிய இனிய எழில் எங்கே இந்தப் பழி யான கொடிய காடு எங்கே! மாடு ஆடு புலி காடிகள் மருவி வாழ வேண்டிய இடத்தில் ஈடும் எடுப்பும் யாண்டும் இல்லாத டே முகி வாழ்வது பெரும் பரிதாபமேயாம் என உரிமையுடையவனுய் உருகித் தன் உள்ளத்தைக் காட்டி யுள்ளமை உணர வக்கது. இப்படி அன்பும் ஆர்வமும் கனிக்க வார்த்தைகளை ஆர்த்தி யுடன் கூறிய அத் தார்த்தன் பின்பு இவள் பிறந்த குடியை உரிமையோடு அறிய விரும் சியவன் போல் பேசலாயினன். நீர் யாவன மாமகள்? ==