பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1995 – இக்க உத்தமியின் புனித உள்ளமும் இனிய இயல்பும் கம்பிா கிலைமையும் கரும சீலங்களும் இங்கே வெளியாகி யுள்ளன. அரிய பெரிய செல்வ கலங்களை யுடைய அரச திருவினன்; உருவில் உயர்வினன் என ஒருவனே இங்ானம் சிறப்பாக வியந்து கூறின், எவ்வளவு பண்பாடுகள் எய்தியிருந்தாலும் பெண்கள் அந்த அதிசய அமுகனேக் குறித்து யார் அவர் என இவ்வளவே லும்.உடனே வின் வ. கேர்வர். ஈண்டு அந்த வாசனையே யாதும் காணுேம்; தாய்மையும் பெருமிதமும் துறைகள் தோறும் பெருகி இறைமை கிறைந்து கிற்கின்றன. குண சீலங்களே எவ்வழியும் கினைவில் எழுகின்றன. - நல்ல மாதவர் பொல்லாத பாதகரிடம் போய் ஆகாவுடன் இருக்கது அதிசய மாயது. என் அப்படி இருந்தீர்? என்று இப்படிக் கேட்டதோடு அமையாமல் உண்மையான துறவியின் இலக்கணத்தையும் எண்மையாக உணர்த்தி யருளினுள். உடலமும் மிகை என்று எண்ணுவீர்! என்றது உயர் தவசி யின் இயல்பையும் கடமையையும் கருதி வந்தது. உலகத்தை அறவே துறந்து பாத்தையே நோக்கி நிற்பவன் துறவி என்னும் சிறப்பை அடைகின்ருன். பிறவி நீங்கிப் பேரின் பத்தை அடைய அவாவியுள்ளவனுக்கு அடைந்துள்ள தேகமும் தடையா யிருத்தலால் உடலை ஒரு சிறைக் கூடமாகவே கருதி ஒரு முகமாய் அவன் வெறுத்து கிற்கின்ருன். * தன் உயிர்க்கு இடமாயுள்ள உடலையே பகை ஆகவும், மிகை ஆகவும், பாரமாகவும் கருதியுள்ள துறவி உலகில் வேறு எந்தப் பொருளை விரும்புவன்? யாருடைய உதவியை காடுவன்? யாதொரு சார்பையும் எவ் வகையிலும் சோாமல் திவ்விய தவ கிலையில் செவ்வியுற்றிருக்க வேண்டிய நீர் வெவ்விய தீயவர் கூட்டத்தில் சேர்ந்திருந்தது மிகவும் தீமையாம் என இடித்து அறிவுறுத்த மேற்குறித்த வாக்கியத்தை எடுத்துக் காட்டினள். மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்ருர்க்கு உடம்பும மிகை. (குறள், 345) என்னும் பொது மறையை அடியொற்றி இது வந்துள்ளது.