பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2013 காலை மாலைகளில் தன் காதலனேடு அங் ர்ேக் துறைகளில் உலாவி வங்கவள் ஆதலால் அவ் வுரிமைகள் உரைகளில் உருகி வாலாயின. ஒதாது உணர்வார் உழை ஓடினேபோய் தோன் வினேயேன் நிலைசொல்லலேயோ? தேரிலிருந்தபடியே நதியைப் பார்த்து இவ்வாறு பேரொலி செய்து கூவித் துடித்துளாள். அவள் குலை நடுங்கி நிலை குலைந்து பதைக்கும் துயரத் துடிப்பிலும் தனது குல நாயகனது உயர் ர்ேமையைத் தலைமையாகக் கருதித் தவித்திருக்கின்ருள். ஒதாது உணர்வார் என இராமனுக்கு இங்கே இவ்வாறு ஒர் பேர் அமைந்தது. யாரும் சொல்லிக் கொடாமலே எல்லாக் கலை களையும் நன்கு தெளிந்துள்ள அந்த அதிசய மேதா விலாசத்தை கினைந்து வந்தது. h நதிகள் எல்லாம் விாைந்து போய்க் கடலில் புகுதல் போல், கலைகள் எல்லாம் விழைந்து வந்து இராமனிடம் உ வ க் து குடி புகுந்துள்ளன என்று வசிட்ட முனிவர் தசாதனை நோக்கி முன் னம் * கூறியுள்ளதும் ஈண்டு எண்ணத்தக்கது. ஆகாய வழியில் போகும் பொழுது ஆவி பதைத்தாலும் கோபமும் மானமும் ாேமும் சீதையின் உள்ளத்தில் கொதித் தெழுந்து குமுறி யிருக்கின்றன. மலைகளில் மருவி வாழும் பல வகை மிருகங்களையும் பரிந்து கூவி வருக்கி யிருக்கிருள். 'குகைகளில் வாழ்கின்ற ஒ சிங்கங்களே! புலிகளே! மலைச் சுனைகளே! என்னை அகியாயமாய் எடுத்துக் கொண்டு போகின்ற இந்தப் படுபாசகனுடைய கலைகள் பத்தும் பனங்காய்கள் போல் கொத்துக் கொத்தாகச் சிதறி உதிரும் கோாக் காட்சியை நீங்கள் நேரே பார்த்துச் சிரிப்பீர்கள்! என் விர நாயகன் விாைவில் வக் தால் நான் சொன்ன உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள் விர்கள்!' என விழிர்ே சிந்தி அழுது புலம்பினுள். துயர கிலையில் சிக்கி உயிர் பரிதபிக்கும் பொழுது உணர்வு கிலை குலைந்து புலம்ப நேர்த்தமையால், மலையே! மரனே! மயிலே! குயிலே! কি করা" எதிாே கண்ட பொருள்களை யெல்லாம் பார்த்துக் o கூவலாளை. _ _ _ - == === ====.-- இந் நூல் பக்கம் 334 வரி 12, பார்க்க.