பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2014 கம்பன் கலை நிலை கேளாதவற்றையும், காணுதவற்றையும், பேசாதவற்றையும், கேட்டுக் கண்டு பேசி ஆறுதல் கூறுவனபோல் அவாவிக் கூவி யிருத்தலால் அந்த ஆவியின் அலமால்களை உணர்ந்து பரிசுபிக் கின்ருேம். "ஞாயிறு திங்கள் அறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் துவலிய நெறியால் சொல்லு போலவும் கேட்குங் போலவும் சொல்லியாங் கமையும் என்மனர் புலவர். ' (தொல்காப்பியம்) பிரிவாற்ருமல் மறுகிப் புலம்புங்கால் மிருகம் பறவை கதிர் மதி மாம் மனம் முதலியவற்றை முன்னிலைப் படுத்தி எவரும் ஏங்கி அலறுவர் என்பதை இந்த இயல் விதி விளக்கி யுள்ளது. நிலையா உயிரே! நிலை தேறினர் போய் உரையீர்! எனத் தன் உயிரை கோக்கிச் சானகி கூவியுள்ளதும், அதன் துயர கிலைகளை எளிதாக வெளி அறியத் தெளிவுறத்தியது. 'கிலை குலைந்து தத்தளிக்கின்ற ஒ என் உயிாே! நீ இந்த உடம்பை விட்டு விரைந்து ஒடிப்போய் நம் காயகனிடம் கேர்த் துள்ளதைச் சொல்; அவர் விாைந்து வந்து நமக்கு உய்தி யருளு வார்; இங்கே கின்று வினே கவியாதே; தாவிப் போய் நம் ஆவித் துணையை அழைத்துவா; இந்தப் பாவியின் கலைகளும் தோள்களும் துண்டம் துண்டமாய் கிலை குலைந்து கீழே விழு வதைக் கண்டு மகிழலாம்' என்று கலங்கிப் புலம்பி யுள்ளாள். சானகி இவ்வாறு ஒலமிட்டுக் கூவியதைக்கேட்டு இராவணன் சிரித்தான். தன் தீாத்தை விரித்தான்; ஒ பெண்ணா சி! நீ இன்ன மும் என்னுடைய வீசப் பிரதாபத்தைத் தெரிந்து கொள்ள வில்லையே; அந்தச் சின்ன மனிதர் வந்து என்னை என்ன செய்வர்? நான் உன்னை எடுத்துக் கொண்டு போகின்றேன் என்பதை அவர் அறிந்தால் உடனே உயிர் கலங்கி இவ் வனத்தை விட்டே ஒடிப் போய விடுவார். நான் இருக்கும் திசையைக்கூட அவர் திரும்பிப் பார்க்க மாட்டார். என் பெயரைச் சொன்னல் ஈசனும் கூசு