பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2016 கம்பன் கலை நிலை என்று உறுதியாகக் கருதியுள்ளமை உணர வந்தது. உடையவனே அவாவி உயிர் துடித்திருக்கின்றது. கடவல்=செலுத்தல்.

மானமும் காணமும் இன்றி ஈனப் பேடி போல் இழிந்து ஒடாதே; துணிந்து நில்!” என்று சானகி இங்ாவனம் சொல்லவே, அத் தளர்த்தன் மறுத்து வார்த்தைகள் ஆடினன். ஐயோ ! பேதாய்! என் செய்கையை நீ தவறு ஆக எண்ணியிருக்கிருய். நான் இராமனுக்கு அஞ்சினேன் என்ற நீ நெஞ்சில் கினைந்துள் ளதை கினைக்குங்தோறும் எனக்கு கைப்பு வருகின்றது. ஈசன் கயிலையைப் பறித்து எடுத்த நான் ஒரு மனிதைேடு எதிர்ப்பது பெரிய அவமானம் என்று கருதியே இந்த உபாயத்தைக் கை ஆண்டேன். அச்சத்தால் இது செய்தேன் என்று நீ சொல்வது அறியாமையேயாம். அச்சம் என்பதை யான் யாதும் அறிகிலேன்: என்னைக் கண்டு அது அஞ்சி ஒழிந்து போனமையால் அந்த அச் சத்தை கான் காண முடிய வில்லை உச்ச விானை நான் உன்மேல் வைத்துள்ள இச்சையால் உனக்கு உரியவர்களுக்கு ஒரு தீங்கும் கோவண்ணம் பாங்கோடு கடந்திருக்கிறேன். என்னுடைய உள் ளப் பாசத்தையும் உரிமை கேசத்தையும் நீ ஒரு சிறிதும் உணர வில்லை. இன்னும் சில நாளில் எல்லாம் தெரிந்து கொள்வாய்!” என்று இப்படிச் சொல்லிக் கொண்டே தோைக் கடாவி வானில் விாைந்து போயினன்.

சடாயு வந்து பாய்ந்தது. இராவணன் அவ்வாறு கடு வேகத்தோடு ஆகாய வழியே போகுங்கால் சிதை ஆவி பதறி அலறிள்ை. 'ஆ கொடிய பாக கா! எனது நாயகனுடைய கூரிய பாணங்களால் உனது முடிக் தலைகள் படித்தலத்தில் துடித்து உருளாதபடி கடுத்து ஒடிப் பயந்து போகின்ருயே! ' என்று பரிதாபமாய்க் கூவிள்ை. இங்ங்ணம் கூவுங்கால் வடமேல் திசையிலிருந்து ஒரு நெடிய ஒசை கடிது எழுந்து அ.கி வேகமாய் வந்தது. 'அடே' எங்கடா போன்ெருய்! கில் கில் கில் கில்' என்று சொல்லிக் கொண்டே சடாயு விரைந்து பறந்து வெகுண்டு பாய்ந்து வன்தான். விரித்த சிறகுகளை வேகமாய் விசி அப் பறவை வேந்தன் பறந்து வந்த அதிர்ச்சியால் வனத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் கலங்கி