பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1724 கம்பன் கலை நிலை தவக்கோலத்தைப் பார்த்து உவப்பு மீதார்ந்தவள் மேலும் பல கினைந்து சாலவும் வியந்து மாலுழந்து நின்ருள். இவன் அடிக்கலம் தீண்ட இப் படி த்தலம் என்ன பாக்கியம் செய்தது பசிய கோலக் கிருமேனியனை இவன் தன்பால் வந்துள்ளமையை கினைந்து உள்ளம் களித்து உவகைப் பூரிப்பால் உடல் சிலிர்த்துள்ளமையினலேகான் பசும் புல்லாய் வெளியே படர்ந்து திகழ்கின்றது. 'உடுத்த ர்ே ஆடையள் உருவச் செவ்வியள், ’ எனப் பூமி கேவியை வருணித்தது கன்னைப் போல் ஒரு பெண் என எண்ணி. இக்குலமகன் பாதம்பட கிலமகள் உள. மகிழ்ந்தாள் என இவள் கினைந்து விழைந்தாள். மண்மகள் பொன் மகளாயினுள் என்று தன் மனம் நாணினுள். பசிய சூரியன் போல் ஒளி மிகுந்துள்ள இவனைக் காணின் உலக சூரியன் நாணி ஒதுங்குவான். பதினறு கலைகளும் கிறைந்த பூரண சந்திரனிலும் இவன் திருமுகம் பொலிவும் எழிலும் பொருங்கி மிளிர்கின்றது. அம் முழுமதி களங்கமுடைமையால் இவ் விழுமிய முகத்திற்கு ஒப்பாகாது. இவனது வாய் இதழுக்குப் பவளத்தை உவமை சொல்வது மிகவும் அவமானமாம். "ஒப்பு என உலகம் மேல் உரைக்கின் உள்ளமே துப்பு எனின், துப்புடை யாதைச் சொல்லுவேன்? : சிறந்த அவயவங்களுக்கு உவமையாக நூல்களில் சொல்லி வந்த வழக்கத்தின் படி இவன் அகரத்துக்கும் பவளம் உவமை யாம் என உலகம் சொல்ல நேரின் என் உள்ளம் அதனை ஒத்துக் கொள்ளாது; வெறுத்துத் தள்ளும். துப்பு ஒப்பு எனின் கான் ஒப்பேன்; உணர்ச்சியுள்ள உள்ளங்கள் எல்லாம் அப்படிச் சொன்னவகைக் குற்றம் கூறிக் காறித் துப்பும். துப்பு= பவளம், பகை, குற்றம், உமிழ்தல். " துப்பு உடை யாதைச் சொல்லுவேன்? ' என்று இப்படி வாகைப் படுகின்ருள். துப்பு = துய்மை, நன்மை. அமுத நீர்மையாய் அமைத் திருக்கின்ற இந்தச் சிவந்த இதழுக்குத் தகுதியான தாய உவமை யாதும் எங்கும் அமையாது ஆதலால் என்னல் ஒகி உணர்த்த முடியாது.