பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1782 கம்பன் கலை நிலை உயிர்களுக்கு ஞானக் கண் அருளும் கருணைக் கண் என்று காட்டியது அவனது காட்சியையும் மாட்சியையும் கருதி யுனா. மெய்ஞ்ஞான நாகனே அஞ்ஞான மாது அவாவி அடைந்தாள். மையல் மீதுர்ந்து வருகின்ற அத்தையலே அயல் வரும் பொழுதே இந்த ஐயன் நோக்கினன். கந்தருவ மங்கையோ, நாக கன்னிகையோ, கேவ மாகோ, என யாவரும் திகைக்கும்படி ஒவிய உருவாய் ஒளி மிளிர்ந்து எழில் ஒழுக எய்திய அவளை இவன் விழி களிப்ப நோக்கி நேர் இழையர் யாவர் இவர்? ' என நெஞ்சுள் கினைந்தான். இவள் யாவள்? என நினையாமல் இவர் யாவர்? என்று மரி யாதைப் பன்மையில் அவளேக் கருதியிருக்கலால் மற்றவர்களைக் கனம் பண்ணிவரும்.இவனது பெருந்தன்மையை விளக்கி நின்றது. வந்தவளுடைய வனப்பின் சீர்மையும் இருந்தவனது சிங்தை யின் நீர்மையும் இங்ங்னம் உயர்வான உரையை உருவாக்கி யுள்ளன. வாய்மொழி மன மாண்பு கனிந்து மதி மிகுந்துளது. பெண்களை மரியாகையாக மதித்து கடத்தும் முறைமையை இக் காட்டவர் பழமையாகவே பழகி வந்துள்ளனர். அவ் வளமை நம் கவியினிடம் கிழமையாகக் கிளர்ந்து மிளிர்கின்றது. திவ்விய சவுக் கரியாய் வந்த அவள் இராமனே அணுகி அதி விதயமாய் இருகை குவித்து வணங்கி இளமுறுவலுடன் ஒரு வகையாய்த் திருமுகம் நோக்கிப் பெரு நாணமுடன் அயல் ஒதுங்கி மயல் இயல் கனிய மருவி கின்ருள். 'கண் அயில் வீசி அயல் பாரா ஒதுங்கி நாணி கின்ருள்: அன்று அவள் பார்க்க பார்வையும் கின்ற கிலைமையும் இதில் நேரே தெரிகின்றன. கண்ணே அயில் என்றது அதன் இயலேயும் செயலையும் எண்ணி யுனா. அயில் = வேல். காமம் கனியப் பார்ப்பதில் பெண்கள் கண்கள் அதிசாதுரியமான ஆற்றல் வாய்ந்துள்ளன. மங்கையர் கண் நோக்கி மையல் வலை விசின், இங்கு எவரே கப்பி இடை உய்வார்? ' என்றமையால் அவர்கம் கண்ணின் வேலைகள் காணலாகும். அரிய ஒரு பார்வை பார்த்து மிக்க வெட்கமுடையவள் போல் ஒல்கி ஒசிந்து பக்கம் கின்ற அங்க வஞ்ச மகளே இந்த