பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1742 கம்பன் கலை நிலை கெய்வ ர்ேமையைத் தழுவிப் புண்ணிய கருமங்கள் புரிந்து வரு கின்றேன்; அரிய ஒரு தவப் பேற்ருல் இவ் வுருவம் எனக்கு அமைந்தது. திருமகள் அருளால் வந்தது; இலக்குமி சரசுவதிகளே உபாசித்து வருபவர் அழகிலும் திருவிலும் அறிவிலும் தலை சிறந்து விளங்குவர் எனச் சுருதிகளில் அறிந்து கொண்டேன்; அம் முறைகளைத் தழுவி ஒழுகி விழுமிய சித்திகளை நிறையப் பெற்றிருக்கிறேன். என் கிலைமைகளை நானே சொல்வது தகாது; ஆயினும் தகுதியான உங்களிடம் உண்மையை ஒளியாமல் உரைக்க கேர்த்தேன் ' என உரிமையுடையளாய் கடித்து முடித்தாள். தனது குலமாபையும், உறவினங்களையும், சக்கரவர்த்தி நிலையில் தலை சிறந்து கிற்கின்ற தன் தமையனையும் இகழ்ந்து பேசித் தன்னுடைய கருத்தை முடித்துக் கொள்ள இவள் துடித்து நிற்கின்ருள். நெஞ்சின் வேகம் நிலை மீறி வருகின்றது. காமத்தின் வசப் பட்டவர் காதலன் விரும்பியபடி யெல்லாம் திரும்பி விடுவர்; அவன் உள்ளம் கோண யாதும் கானர்; பெற்ற தாயையும் உற்ற தங்தையையும் மற்றுமுள்ள செல்வங்கள் எல்லா வற்றையும் வெறுத்து விடுத்து அவன்பின் விரும்பிச் செல்வர். காம இச்சை எதையும் துறக்கச் செய்கின்றது. அதன் அதிசய நிலை உரைசெயல் அரியது. அந் நிலைமையை இங்கே நேரே நோக்கு ன்ெருேம். கள்ளம் புரிவதிலும் உள்ளம் தெரிகின்றது. தான் கவ்விய காதலன் உள்ளம் எவ்வகையாலும் தன்னே வவ்வ விழைந்து வழி வகைகளை காடி மொழிகளை வீசுகின்ருள். கேட்கின்றவன் புண்ணிய விருப்பன் என்று உணர்ந்து கொண்டமையால் அறம் தலை நிற்பது ஆனேன் எனத் தன்னை வரைந்து காட்டினள். உரிமை புரிந்து உள்ளே நெருங்குகின்ருள். பாவகாரிகளான அரக்கருடைய தொழில்கள் யாதும் , எனக்குத் தெரியாது; நான் தனியே கரும நிலையில் தழைத்து கிற் கின்றேன்; தவ கலங்களை விழைந்து நாளும் புனித வழியில் பொழுதை இனிது கழித்து வருகின்றேன் என இயலும் செயலும் அயலறிய உாைத்துத் தனது மயலியலை விரித்தாள். தீயவர் பால் வெறுப்பு, நல்லவர்மேல் விருப்பு, சிறந்த கல்வி யறிவு, தரும சிக்கன, தவ ஒழுக்கம், அருள் கலம், முதலிய