பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2226 கம்பன் கலை நிலை.

இக்க அருமைக் கிருக்குறளே மருவி இறுதி இரண்டு அடி களையும் உரிமையுடன் கவி உரைத்துள்ளமை உணரலாகும். - இங்கே கேள்வி என்றது தத்துவ உபதேசங்ககா. உயிர்க்கு உறுதியான உணர்வுரைகளைக் கேட்பதே செவி என்ற களுல் அங் கனம் கேளாதது செவி ஆகாது என்பது பெறப்பட்டது.

புண்ணுகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம் வளர்ந்து வண்ணப்பூண் பெய்வ செவி அல்ல-நுண்ணுரல் அறவுரை கேட்டுனர்க்கு அஞ்ஞானம் நீக்கித் துறவுரை கேட்ப செவி. (அற நெறிச் சாரம்) பொன் மணி வயிரம் முகவிய அணிகளை அணிவதற்காக மனிதன் செவிகள் அமைத்தில; மெய்ஞ் ஞானமான புண்ணிய மொழிகளைக் கேட்கவே அமைந்தன என இது அறிவித்துள்ளது. கேட்கப் படுவன எல்லாம் கேள்விகள் ஆகா. உயிர்க்கு உறு தியாய் உய்தி தருகின்ற உணர்வுரைகளே அனுபவ சிலர்களிடம் கேட்டதே கேள்வி ஆம்.

மறவுரையும் காமத் துரையும் மயங்கிப் பிறவுரையும் மல்கிய ஞாலத்து-அறவுரை கேட்கும் திருவுடை யாரே பிறவியை நீக்கும் திருவுடை யார். பிறவித் துன்பத்தை நீக்க அணிய கரும மொழிகளைக் கேட் பதே கேள்வி, அக் கேள்வியாளரே பெரிய பாக்யெசாவிகள் என முனைப்பாடியார் இங்கனம் உணர்த்தியிருக்ருெ.ர்.

புனிதமான கேள்வி மனிதனது செவித் துனேயுள் புகுந்து உண்மையை ஊட்டி உயிர்க்குத் தெளிவு காட்டி அருளுதலால் அது ஒரு மெய்ஞ்ஞான அமுகமாய் மேவி யுள்ளது.

உய்தி லைம் அருளுவதே கேள்வி என்றதனுல் அதன் பொரு ளும் தெருளும் அருளும் அமைதியும் அறிந்து கொள்ளலாம். உணர்வுக்கு இனிய உணவாய் உயிரை வளம்பெறச் செய்து உயர் கலம் புரிந்து வருதலால் அது செவிச் செல்வம் என நேர்ந்தது.

“No discourse can be eloquent that does not elevate the mind.” (Goldsmith) “a sm or Aero as உயர்த்தாத சொல் கல்ல கேள்வி ஆகாது” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது.