பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2264 கம்பன் கலை நிலை

‘செம்மல் உள்ளமொடு செல்குவிர்’ (சிறுபாண், 145) பொறுமை விாம் தலைமை முதலிய உயர்ந்த கிலைமைகளில் ஒளி செய்துள்ள சீரியசையே செம்மல் என்னும் பேசியல் பால் கூறி வருவது வழக்கம் என்பதை இவற்றால் உணர்ந்து கொள்ள லாம். அக்கச் சீர்மை ர்ேமைகளை ஒர்ந்து கொள்ளும்படி இங்கே கூர்மையாக் குறித்தான்.

ஏவல் செய்வேன் என்றதுதான் விநய மிக வுடையதாய் .தனுகி கோக்க அழைக்கது. சுக்கிரீவனுக்கு உண்மையில் இவன் முதல் மக்திசி. இவனுடைய உணர் அமைகளைக் கேட்டே பல இடையூறுகளேயும் கடந்த அவன் அமைதியாய் வாழ்ந்து வரு கிருன். அங்கனம் கலைமையான நிலைமையில் உள்ள இவன் அவ அக்கு ஊழியம் செய்பவன் என்.று இமாமனிடம் இங்கே தாழ் மையாய் உாைத்திருக்கிருன்,

மனிதன் யாண்டும் கன்னே உயர்த்திப் பேசவது இயல்பு. சின்ன நிலையில் இருக்காலும் பெரிய அதிகாரிபோல் அயலார் அறியச் செயலாடுகின்றான் இயல்பாகவே உயர்ந்த பதவியில் இருக்கின்ற இவன் ஊழியன் னன்றது இவனது அடக்கத்தையும் பணிவுடைமையையும் உணர்த்தியது எனினும், உள்ளே ஒரு குறிக்கோளே மருவி கிற்கின்றது. என்னே கறி? எ னின். பின்ன்ே நோக்குக.

இராமனேக் கண்டவுடன் இந்த மூர்த்தியை எப்படியாவது வேண்டும் என்று அனுமான் ஆசை கொண்டான் கருதிய கருக்கைப் பூர்த்தி செய்ய உறுதி நாடி உரையாடுகின் முன் : சுக்கிரீவன் மீது இம மனுக்கு ஒரு

சுக்கிரீவனேடு சேர்த்து வைக்க

பெரிய மதிப்பும் அரிய விருப்பமும் உண்டாக வேண்டும் என்று உள்ளம் கொண்டுள்ளமையால் அவனே அதி உன்னத கிஆலயில் உயர்க்கிப் பேசுகின் ருன்: ஒரு மன்னர் பிசானக மதித்து அவன் பால் மரியாதையும் பிரியமும் மருவும் படி உரிமை கூர்ந்து ஆவ லோடு உாைக்து வருதலால் அன்னவனுக்கு ஏவல் செய்வேன் என்று தன் னே இன்னவா.அ தாழ்த்திச் சொன்னன். எ விய பணியைச் செய்கின்ற ஊழியன் இவ்வளவு பணிவும் பண்பும் உடையணுயின், இக்க அடியவனே வைத்து வேலை வாங்குகிற அக்க ஆண்டவன் எவ்வளவு அறிவும் ஆற்றலும் அமைத்திருப் பான்! என அதிசய ஆர்வமுடையய்ை இராமன் மதி மகிழும்படி இம் மதியூகி எ கிர்வது கருதி இனிது மொழிந்துள்ளான்.