பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2272 கம்பன் கலை நிலை.

இந்தச் சிறிய ஆணி இல்லை.ஆனல் எந்தப் பெரியதேரும் இடாது. ஒரு வேளை துணிந்து ஒட்டத் தொடங்கின் உருளைகள் அயலே விலகிப் போம்; போகவே தேர் உடைந்து கீழே விழும்:

சிறிய உருவுடைய இது பெரிய தேர் இனிது ஒடி வருதற்கு உறுதி புரிந்திருத்தல் போல் பருவ உருவங்களில் சிறியாயுள் ளவரும் அரிய பெரிய காசியங்களை யாதொரு இடையூறும் கோாமல் ஆற்றியருள வல்லவராயிருப்பர் ஆதலால் அக் கரும விாருக்கு இது ைவமையாய் வங்கது. - -

அகத்திய முனிவர் குறிய வடிவினர்; அவர் செய்துள்ள அதிசய வினைகள் அளவிடலரியன. உலகம் நிலை குலைந்து தாழ கேர்த்த போது அவர் பொதியம் புகுந்து இதனைத் தாழாமல் கிலே நிறுத்தியருளிய திறனே தால்கன் பலவும் போற்றியிாகக் ன்ெறன.

உருவ நிலையின் குறுமை கண்டு எவரையும் எளிதாக எண் னிவிடலாகாது; அவரிடம் உலகம் உய்யக் கக்க அதிசயஆற்றல் மருவியிருக்கும் என அறிவுறுத் துகின் ருர் ஆகலால் உருவு கண்டு எள்ளாமை வேண்டும்; உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்ன ரும் அவ் வருவள் மறைந்திருப்பது உண்டு என்று தேவர் இங்க னம் உறுதி கூறியருளினர். --

இங்கே சாதாரணமான வாலிபன் போல் அனுமான் வந்து கிற்கின் முன்; அவனது புற வடிவத்தைக் கண்டு கம்பி எளி தாக எண்ணி விடலாகாதே என்று இக்க அண்ணல் இவ்வண்ணம் தெளிவாக உண்மையை உணர்த்தினன்.

மானியாம் படிவம் அன்று என்றது காண கின்ற விடிவைச் சுட்டிக் காட்டி உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என வேண்டி மொழிக் தான். == -

உலகுக் கெல்லாம் இவன் ஆணி என்றது எல்லா உலகங் களும் அல்லல் யாவும் நீங்கி நல்ல நிலையில் இனிது வாழ ஆதரித் தருளும் அதிசய ஆண்டகை எனத் துதி செய்த படியாம். . .

உருள் பெருந்தேர்க்கு அச்சாணி போல் இவ் உச்ச விசன் உலகிற்கு ஒர் ஊன்று கோலாய்க் கோன்றியிருக்கின்மூன்.