பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ

முகவுரை,

இது புலவர் உலகம் என மாதம் தோறும் வெளி

கதை தழுவிய சீவிய ஒவியங்கள் பல உணர்வொளி விசி விழுமிய நிலைகளில் இதில் எழில் மிகுந்துள்ளன.

சீதையை எடுத்துச் சென்ற இராவணனை இடையே தடுத்து நிறுத்தி அமர் புரிந்து சடாயு கீழே வீழ்ந்ததும், மாயமானத் தொடர்ந்து போன இராமன் தம்பியோடு மீண்டு வந்து இல்லாளேக் காணமல் உள்ளம் துடித்து ஓடி வழியிடையே சடாயுவைக் கண்டு மறுகி அழுது உறுதி தெளிந்து அவனத் தகனம் செய்து விட்டு அயலே போய் ஒரு மலையிலிருந்ததும், நடுநிசியில் தண்ணிர் கொண்டு வரச் சென்ற இளையவன் நெடு நேரம் வராமையால் அந் நெடி யவன் நெஞ்சம் பதைத்து முடிவு செய்ய மூண்டதும், பின்பு சேர்ந்து மகிழ்ந்து காடுகள் பல கடந்து கவந்த வனம் புகுந்து சவரியை அடைந்து வழி விவரம் தெரிந்து மதங்க மலையைச் சேர்ந்ததும், அங்கே அனுமானேக் கண்டு, சுக்கி ரீவனை நட்புக் கொண்டு, மரா மரங்களே எய்து, வாலி வதம் கருதி கிட்கிந்தகிரிக்கு வங்து குறித்த போரை காடிக் கூர்ந்து கின்றதும், இரண்டு வீரர்களும் எதிர்ந்து போருக்கு நேர்ந்த தும் ஆகிய சரித வரலாறுகள் இதில் அடங்கியிருக்கின்றன.

நிகழ்ந்த சரித்திரக் காட்சிகளுடன் உயர்ந்த உறுதி நலங்களும் சிறந்த அறிவின் சுவைகளும் சுரந்திருக்கின்ற இங்த இனிய நூலே உலகம் உவந்து நுகங்து வர இறைவன் திருவருளே நான் கினைந்து நிற்கின்றேன்.

இங்கனம்

ஜெகவீரபாண்டி யன்.