பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2371

‘கான் உயிரோடு இருக்கவும் என் மனைவி கலன்களைக் கழித் துக் காட்டுவழியே எறிக்கிருக்கிருள்; கற்புடைய எங்கக் குலமக ளாவது யாண்டேனும் இவ்வாறு செய்ய நேர்ந்த துண்டா? அங்கத் தீயவன் எடுத்துச் சென்ற போது இடையே நான் வந்து மீட்டி யருள்வேன் என்று கருகியல்லவா வழிமுழுதும் கண்ணுய் அவள் கதறி அழுது போயிருக்ருெள். உரிய மனைவியை அயலான் கையில் பறி கொடுத்து விட்டு நானும் ஒரு மனிதன் போல் வில் லைக் கையில் எக்தி வெட்கமின்றி உயிர் வாழ்ந்திருக்கிறேன். ஆண் துணை என்று நம்பி வழியிடையே வந்து சேர்ந்த ஒரு பெண்ணே எந்த மனிதனும் கை விட மாட்டான். கள்ளர் முதலிய தீயவர் களால் ஏகேனும் இடர் கேர்ச்தால் தம் உயிரை விடுத்தாவது அடுத்த மகளிாை எவரும் காக்கருளுவர். உலல்ெ நிலவி வரும் பொதுவான ஆண் கடமை இது. நான் என்ன செய்துள்ளேன்? என்பால் நேர்த்துள்ள பேடித்தனத்தைக் கண்டு ஆண் குலமும் பெண் குலமும் அவமதித்துச் சிரிக்குமே கொண்ட மனைவியை வேறு ஒருவன் கவர்ந்து கொண்டு போக யாதும் காக்காமல் கை விட்டுள்ள நான் வையத்தில் வாழ்வது ஐயோ! எவ்வளவு பழி: என் முன்னேர் மன்னர் மன்னாப் மன்னி யிருந்து மண்ணும் விண்ணும் வியந்து துதிக்க உயர்ந்த கீர்த்திகளை விளைத்திருக்ன்ெ றனர். கருங்கடல் தோண்டினர்; கங்கை கொணர்ந்தனர்; புவியும் பசவும் ஒரு துறையில் நீர் அருந்த கிே புரித்தனர்; உலகம் முழு வகையும் ஒரு குடை கிழலில் புருவால் யாதும் உருமல் பாது காத்தருளினர்; அந்த மாபில் வந்த நான் என் சொந்த மனைவி யையும் காக்கமுடியாமல் கைவிட்டிருக்கின்றேன். என் தங்தையார் இங்கிசனுக்கும் இடர் நீக்கி இகம் புளிங்தார்; எமனும் அஞ்சக் தக்க கொடிய விசனை சம்பரன் என்னும்.அசுர வேந்தனை வென்று அமார் வேக்கனுக்கு அருள் புரிந்து வந்த அந்தப் பெரும் புகழ்க் குரிசில் வயிற்றில் பிறந்த நான் கொடும் பழி சுமந்து கிற்கின்றேன். என் பிறப்பு பெருஞ் சிறப்புடையது சுக்கிரீவா தாய் சொல்லைக் கடந்தால் தக்கைக்குப் பழியாமே என்று அஞ்சி அரசு முடி துறந்து வனவாசம் வந்தான் வந்த இடத்தில் மனைவியைப் பிற னிடம் கொடுத்து விட்டு வசை கொண்டுள்ளேன்; நான் உயிர் வாழ்ந்திருப்பது ஞான சூனியமான ஒரு மானங் கெட்ட செயல். இறந்து படுவது கலம்; உனக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியை