பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2416 கம்பன் கலை நிலை

‘தள்ளா வினையேன் தனி ஆருயிராய் உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனே யோ?” (அயோமுகி,68) என இளையவனே கினைந்து இராமன் உள்ளங் துடித்து அலறி பிருக்கும் இதில் தனது ஆர் உயிர் என்றே கம்பியை அவன் கருதி டிருகி யுள்ளான். உள்ளத்தின் பரிவு உரை வழியே ஒழுகியுள்ள மையை உயிர் உருகிக் காண்கின்றாேம்.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இலது. என எண்ணி பிருக்கும் புண்ணியன் என்று வாலி இங்கே சொல்லிய உண்மை அந்த அண்ணன் வாயிலிருந்து முன்னமேயே வெளி வந்துள்ளது. தன் தம்பியை அறவே வெறுத்து உள்ளம் கொதித்துள்ள வன் வேறு தம்பியர் மேல் ஒரு அண்ணன் கொண்டுள்ள அன்பு கிலையை இவ்வளவு ஆர்வத்தோடு வியந்து பாராட்டி யிருக்கிருன். இவனுடைய நெஞ்சின் நீர்மை கேர்மை சீர்மைகளோடு கிறைக் கிருத்தலைக் கூர்மையாக ஒர்த்து கொள்கின்றாேம்:

அக்தத் தமையன் பேறு தனக்கு அமைய வில்லை. அவனு டைய கம்பிகள் இனிய அன்புருவங்கள்; தன் கம்பி கொடிய பகை வடிவம். மாயாவியோடு தான் பொருது மாண்டதாகக் கருதிச் சமையம் பார்த்து தனது அரசுரிமையைக் கவர்த்து ஆண் டான் எனச் சக்கிரீவன வெறுத்துக் கடுத்துக் தனக்குள்ளேயே இவன் இகழ்ந்திருக்கிருன்.

அண்ணன் என்று யாதும் எண்ணுமல் அகியாயம் செய்து என் காட்டை விட்டு ஒடி ஒளித்து போன அக்கச் சின்னப்பயல் இன்று வலிய வக்த சண்டைக்கு மூண்டிருக்கிருன்; இதில் அவனே அடியோடு தொலைத்து விடுவேன்; இக்கக் காயாதிச் சண் டையில் அங்கத் தாயவன் இடையே வந்த எனக்கு இடையூம செய்வான் என்று நீ சொல்லுவது ஒரு மாயா வினேகமான மட மையே என மனேவியின் மனத்தை இனமாகத் தேற்றினன்.

எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை

அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான்?

அக்க நம்பியை இவன் எப்படி நம்பி யிருக்கின்றான்? இவனு டைய மதிப்பும் மன வுறுதியும் மதி சலனும் அதிசய கிலையில் ஒளி விடுகின்றன. கோதுபதியாக நீதிபதி என்றான்