பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 24.17

இன்னுயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன்வங்தான் எனத் துன்னிய அன்பினர் சொல்லினர்.

என்று தாரை முன்னம் சொன்ன கற்கு இன்னலுழந்து பல வகையான இனிய நிலைகளை எடுத்துக் காட்டி இம.கியில் இன்ன வாறு உறுதி கூறி யுள்ளான். த்ன்னிய அன்பினர் சொல்லினர் என்றதனுல் நெருங்கிய பந்துக்கள் மூலம் இக்க அங்காங்கம் அறிய வந்தது என அதன் உறுதி தெளிய உரைக் காள்.

அாசி அந்தப் புசக்தில் இருப்பவள் ஆதலால் இராமன் எதிரி யோடு தொடர்பு கொண்டு வந்துள்ள இரகசியத்தை யாரோ உணர்ந்து வந்து விாைந்து சொல்லி யிருக்கிறார் என்பது அவளு டைய உரையிலிருந்து தெரிய வருகின்றது:

தன்னுடைய அருமை மகன் அங்கதனே வந்து சொன்னதாக வால்மீகியில் கூறப்பட்டுள்ளது. கேள்வியின் கிழமை தெளிய கின்றது. உறுதியான வதக்கி கருதியுணா சேர்க்கது.

இனிய மனைவி உரிமையுடன் உண்மையை உாைத்தும் இவன் ஒன.றம் கம்பாமல் இராமன்பால் அதிசய அன்பு மண்டி அற்புத மூர்த்தி என்று அவனத் துதித்திருப்பது எவர்க்கும் வியப்பை விளைத்திருக்கின்றது.

உன் உயிர் கோடலுக்கு வந்தான் என இங்ானம் கொடிய மொழியால் குறித்துச் சொல்லியும் இவனுடைய உள்ளம் மாறு படாமல் மதிப்பே மண்டித் துதிப்பாயுள்ளது:

('தரும மூர்த்தி; சத்திய சீலன்; உத்தம நீதிமான்; உயர் குணக் குரிசில், தம்பியரைத் தன் உயிராகக் கருதியிருப்பவன்; அதிசய வீரன்; உலக முழுவதையும் ஒருங்கே வெல்ல வல்லவன்; எந் நிலை யிலும் யாரும் தனக்கு கேரில்லாதவன்; கருணைக் கடல் ‘ என இராமனேக் குறித்துத் தன் மனேவியிடம் வாலி இவ்வாறு புகழ்ந்து கூறி அவளைத் திருக்கி யிருக்கிருன்.

(வாலியைக் கொல்ல வேண்டும் என்று வில்லும் கையுமாய், மறைவில் மூண்டு கிற்கின்ற இாாமன் இவனுடைய வாயிலிருந்து உண்மையான அன்பின் பாவசமாய் வெளிவந்துள்ள இன்த இன்ப மொழிகளைக் கேட்டால் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பான்:

அவன் காது கேளாதபடி விதி தீது செய்துள்ளது.”

303