பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2118 கம்பன் கலை கிலே

லாயினன். அருக்கிறல் கிறைந்த ஆண்மையாளன் ஆகையால் அம் மேன்மை குன்றியது என மிகவும் வருங்கி கின்றான்.

ஆண்மை நீங்கி இருப்பதை விட இறப்பது மேன்மை என்று எண்ணி யிருக்கிருன். சிறந்த மான விான் ஆதலால் ஊனம் உறவே உயிரை வெறுத்தான். துயாம் மிகுந்த பொழுது உலகத்தை வெறுத்துத் துறந்து போகவும், இறந்து நீங்கவும் மனிதன் துணிவான் என்பதை இப் புனிதன் கிலை ஈண்டு விளக்கி கினறது. மானச இயற்கைகள் மண்டி எழுந்தன.

பிறவித் துன்பங்களே மறக்கற்குத் துறத்தலும் இறத்தலும் துணைபுரிகின்றன. மனைவி மக்கள் தாய் கந்தை முதலிய பாசப் பற்றுக்கள் முற்றும் அற்ற மனம் இறந்த கிம்பது துறவு ஆதலால் அதனை முதலில் கினைந்தான். உடம்பையே உதறி எறிந்து விட்டு அடியோடு ஒழித்து போய் விடுவோம என அடுத்து எண்ணின்ை. இக்க கினைவும் எண்ணமும் நேர்ந்த துன்பங்களின் கொடுமைகளை தேரே கிறுத்துக் காட்டின. உலக கிலையையும் உயிரின் இயல்பை யும் உணர்த்தின.

தனக்காகச் சடாயு இறந்து போயுள்ளதை கினேந்து இக் குலமகன் இவ்வாறு குலை துடித்திருக்கிருண். இவனது சூன நீர்மையும் மன மாண்பும் நன்றியறிவும் மான வியமும் கனி நிலையின. எங் கிலையிலும் தாழாது கிணறவன் ஆதலால் தாழ்வு வந்தது என்று வாழ்வை வெறுத்து மாள நேர்ந்தான்.

உயர்ந்த போர்விான் உள்ளம் பதைத்து உரையாடியிருக்கும் உரைகள் அவனது உத்தம கிலைகளை உணர்த்தியுள்ளன.

அவலக் கவலைகளைத் தன் அருமைத் தம்பியிடம் சொல்லி அலமந்திருத்தலால் அவனது உரிமைத் துணைமையையும் உறுதி கிலைமையையும் உணர்வு கலனையும் இவன் கருதியுள்ளமை தெரிய கின்றது. உரிமையாளனிடம் உருகி டிசாவி யுள்ளான்.

இளையவன் உறுதி கூறியது. இங்ஙனம் சிங்தை தொந்து கூறிய இந்த - அண்ணனுக்கு அத்தத் தம்பி சொன்ன பதில் உறுதி உண்மைகளே உணர்த்திக் கரும விசங்களாய்க் கணித்த உரிமை சாக் ைவந்தது.