பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கலைகளில் சிறந்த இசையைப் படைத்த கர்த்தாவே, அந்தக் கலையில்-இசை இன் பத்தில் மயங்கித் திளைத்து, ஆனந்தக் கூத்தாடினார். ஆடுகிற நாயகனின் பாதத் தைக் கண்டு நன்றி மறவா மனிதன், நாவார, நெஞ்சார, இறையைப் பாடிப் பரவினான். உலகெலாம் அந்த இசை முழங்கிற்று.

அடிமுடி அற்ற இறைவனைப்போல, அவன் அருளும் இசைக்கும், ‘ஆதியும் அந்தமும் இல்லை. எங்கும் இசை பிறக்கலாம். நாதம் இல்லாத பொருள் ஏது? அதற் இடம் பொருள் ஏது? குப்பையிலே குருக்கத்திச் செடி முளைப்பதில்லையா? சிப்பியின் வயிற்றில் விலை மதிக்க முடியாத நல்முத்துக்கள் பிறப்பதில்லையா? சிப்பிக்கும் முத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்த உறவின் விசித்திரம் தானே சம்பந்தம்!

எப்படிப் புல்லையும் அதன் இதழ்களையும் பிரித்துக் காண்பது இயலாதோ, அப்படித்ததன் கலையிலே தோய்ந்துவிட்டபின், அங்கே கலைதான் இருக்கும். கலைஞனைக் காணமுடியாது. காலத்தால் தளிர்த்துப் பிறகு அந்தக் காலத்தின் கரங்களிலே, காய்ந்தும் , கரைந்தும், உருமாறும் இதழ்களைப்போல, காலவெள் ளத்தில் கலைஞன்தான், மரித்துப் பிறந்து வருகிறானே தவிர, ஞானத்தால் பிறந்த கலைகள் அழிவதில்லை! அவை சிரஞ்சீவிகளே!

கலைகள் அநாதி, அநாதை ; அவைகளுக்கு ஸ்துால பரம்பரை ஏது? கலைஞன் வயிற்றில் தான் மற்றொரு கலைஞன் பிறந்தாக வேண்டுமென்பதில்லை. எங்கோ பிறந்த அ lெ , உலகெங்கிலுமுள்ளவரைக் கவருவதில்லையா?

இதோ!-கலையே தெரியாத- கலையே பிறவாத ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்ட ஒர் இசைக் கலைஞனையும்: