பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. இரண்டு சிஷ்யைகள்

பிள்ளையவர்கள் கூறிய விளக்கம் பாகவதரின் சிந்தனையைக் கிளறியது. “வித்தையை யாசித்து வருகிற வர்களுக்கு இல்லை என்னாமல் இயன்றவரை வாரி வழங்குவதை விட்டு; அதற்கென்று சில சட்ட திட்டங் களை வகுத்துக்கொண்டு எத்தனை பெரிய பாவம் செய்து விட்டேன்! கடமையைச் செய்வதை விட்டுப் பலனைப் பற்றிச் சிந்திக்க நான் யார்? அதைப் பற்றிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

  • பிள்ளையவர்கள் கூறியது போல் சுந்தரியின் விஷயத் தில் என் கொள்கைகளும் எண்ணங்களும் ஈடேறாததோடு என் வாழ்க்கையையே அல்லவா மாற்றிக் கொண்டேன்? வாழ்க்கையில் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன்: மனத்தில் சப லத்துக்கு இடம் கொடுத்ததில்லை. சுந்தரியிடம் மட்டும் என் மனத்தில் ஏன் திடீரென்று விபரீதமான எண்ணம் தோன்றி, உன்னையே எனக்குக் காணிக்கையாகக் கொடு’ என்று துணிந்து கூறுவதற்குரிய தைரியம் எப்படிப் பிறந்தது?

சுந்தரியைச் சிறந்த பாடகியாக நான் உருவாக் கினாலோ அல்லது அவளே உருவாகியிருந்தாலோ அது என் திறமைக்கு ஒர் எடுத்துக்காட்டு; என் உழைப்புக்கு ஏற்ற பலன். அவ்வளவு தானேயன்றி, அவளையே அடைய வேண்டுமென்று நினைத்தது சரிதானா? அவள் மனத் பு.இ.-8