பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு சிஷ்யைகள் 123

கொள்வர். அவர் தொட்ட காரியம் துலங்கும்; பட்ட பொருள் மணக்கும்.

‘இனி மேல் ஹரிக்கு ஒரு குறைவுமே இல்லை. அவன் பிழைத்துக் கொள்வான்’ என்று பாகவதர் நம்பினார். அத்துடன் தம் மனத்தில் இருந்த வித்தியா கர்வத்தையும் மாயையையும் அவர் அன்று வந்து அழித்து விட்டுச் சென்றதாகவே பாகவதருக்குத் தோன்றியது இல்லா விட்டால் எத்தனையோபேர் வாதாடியும்; எடுத்துரைத்தும் மாறாத அவர் மனம் மாறுமா? அன்று முதலே வசந்திக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஹரியையே குருவாக நியமித்து, இரண்டாம் நாள் பாடத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

வசந்திக்குப் பாடம் தொடர்ந்து நடந்து கொண் டிருந்தது. பாகவதரோடு கச்சேரிக்குப் போகாத நாட் களில் ஹரி தவறாமல் திருவிடை மருதூருக்குச் சென்று வந்தான்.

இதனால் சுசீலாவின் மனத்தில் எல்லையில்லாத கோபம் மூண்டது. தனக்குச் சொல்லிக் கொடுக்க அப்பாக்வுகு விருப்பமில்லை. இப்போது வசந்திக்கு ஹரி யையே இங்கிருந்து அனுப்புகிற அளவுக்கு ஆகி விட்டது. அவள் எந்த விதத்தில் உயர்ந்தவளாகி விட்டாள்?” இந்தக் கேள்வி சுசீலாவின் மூச்சாக எப்போதும் வந்து கொண்டேயிருந்தது.

ஹரி திருவிடைமருதுாருக்குப் புறப்படும் போதும் அங்கிருந்து வரும் போதும், இன்று என்ன பாடம் நடந்தது? எப்படிப்பாடினாள்?’ என்று சுசீலா விசாரிக்கத் தவறுவதில்லை. ஹரியும் கடமைப்பட்டவன்போல் அதைச் சொல்லத் தவறுவதில்லை. நாளடைவில் இது சுசீலாவின் உள்ளத்தில் பெரிய பொறாமைப் புயலை உண்டாக்கியது.