பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 புல்லின் இதழ்கள்

போட்டிருக்கிறது. உங்களுடைய செளகரியத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றுதான் வந்திருக் கிறோம்’ என்றனர்.

“'என் செளகரியம் என்ன இருக்கிறது? இதைப் பற்றி உங்களுக்கு முன்னதாக நான் யோசனை செய்து வைத் திருக்கிறேன். இப்போது உங்களுநடய அபிப்பிராயமும் தெரிந்து விட்டால் முடிவான மாதிரிதான்.’

இது உங்களுடைய சொந்த உற்சவம் மாதிரி. நீங்கள் எப்படிச் சொன்னாலும் அதன்படி நடக்கிறோம்.’

பாகவதர் ஒரு நிமிஷம் அவர்களுடைய முகத்தைப் பார்த்து விட்டுக் கூறினார்.

‘நான் இப்போது சொல்லப் போவது என் சம்பந்தப் பட்ட விஷயம். இல்லாவிட்டால் இதற்குள், நீங்கள் இப்படிச் செய்யுங்கள், அல்லது அப்படிச் செய்யுங்கள்’ என்று அபிப்பிராயத்தைக் கூறியிருப்பேன். இது பொது விஷயம். என்னதான் என்னை நீங்கள் எல்லாரும் தூக்கி வைத்துப் பேசினாலும் நாளைக்குக் கமிட்டியில் யாராவது ஒரு வார்த்தை சொல்லும்படி ஆகிவிட்டால் எனக்குத தாங்காது. அதற்காகத்தான் முதலிலேயே இவ்வளவு தயங்குகிறேன்.’

‘அண்ணா, அப்படியெல்லாம் ஒருக்காலும் நேரவே நேராது. உங்களை மீறிப் பேசக் கூடியவர்கள் இந்த ஊரில் யாரும் இல்லை. நீங்கள் தாராளமாக உங்கள் மனத்தி லுள்ளதைச் சொல்லலாம்’ என்றார் உதவிக் காரியதரிசி.

பக்கத்தில் இருந்த ஹரியைப் பார்த்துச் சிரித்த படி, பாகவதர் கேட்டார், ஹரி பாடி நீங்கள் கேட்ட தில்லையே?’’

  • கேட்டதில்லை. ஆனால் வந்ததும் தம்புரா சப்தம் கேட்டது. பாடம் நடக்கிறது என்று எண்ணினோம்.