பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*146 புல்லின் இதழ்கள்

இருந்து இந்தச் சமயத்தில் பணிவிடை செய்யக்கூடக் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன்’ என்று அழுது கொண்டே இருக்கிறாள். ஆனால் யார் எது வேண்டு மானாலும் நினைத்துக் கொள்ளட்டும்; நான் இப்போது தினம் வந்து உங்களைப் பார்த்து விட்டுப் போவது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றாள் வசந்தி.

இதைச் கேட்டதும் பாகவதர் சற்றுக் கோபமாகப் பேசினார்: யார் உன்னை என்ன நினைத்துக் கொள்ள இருக்கிறது? நீ என்னுடைய பெண்; உன் தாய் என் மனைவி. இந்த விஷயத்தை ஒளிவு மறைவில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சுப்பராமன் தவறான வழிக்குப் போக மாட்டான். என் மனத்துக்குச் சரி என்று பட்டதை இந்த உலகமே எதிர்த்து வந்தாலும், நான் அதிலிருத்து தவற மாட்டேன். அதற்கு ஹரியினுடைய உதாரணம் ஒன்று போதாதா? அவனை நான் வீட்டோடு வைத்துக் கொண்டு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதற்கு என்னை எத்தனை பேர் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப் பார்கள் என்று உனக்குத் தெரியுமா? நான் எதையாவது லட்சியம் செய்திருப்பேனா? இந்தப் பொறாமை பிடித்த உலகம் -பிறர் வாழ்ந்தாலும் பார்க்கப் பிடிக்காமல் கண்ணை மூடிக்கொள்ளும்; தாழ்ந்தாலும்; எங்கே உதவி கேட்க வந்து விடுவானோ என்று பயந்து கண்ணை மூடிக் கொள்ளும். இதை நானா மதிப்பவன்?’

உணர்ச்சி வேகத்தோடு பேசியதானால் பாகவதருக்கு இரைத்தது. அதற்குள் ஹரியும் அங்கே வந்தான். உடனே பாகவதர் அவனிடம், போன காரியம் என்ன? ராஜப் பாவையும், சாமாவையும் பார்த்தாயா? என்ன சொன்

னார்கள்?’ என்று கேட்டார்.

அவர்கள் இரண்டு பேருமே வெளியூர்க் கச்சேரி முடிந்து வெள்ளிக் கிழமை காலையில்தான் ஊருக்கு வருகிறார்களாம்’ என்று ஹரி கூறினாள்.