பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 149

சாப்பிடுங்கள்’ என்றாள் வசந்தி, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்.

‘'நீ சாப்பிடாமல் வேண்டுமானாலும் இரு; ஆனால் அப்பாவிடம் மட்டும் சுசீலாவைப்பற்றி ஒன்றும் சொல்லி விடாதே. அவர் ஏற்கனவே மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார். இதைக்கேட்டதும் அவருக்குக் கோபம் வந்து ஏதாவது பேசினால் பிறகு அதன் பலனை நான்தான் சுசீலாவிடம் அநுபவிக்க வேண்டும். அதற்குச் சம்மத மானால் நீ தாராளமாய்ப் போய்ச் சொல்.’

ஹரியினுடைய வார்த்தையைக் கேட்டதும் வசந்திக்கு மேலும் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

‘நீங்கள் இப்படிப் பயந்து பயந்து நடுங்குவதனால் தான் அவள் உங்களை இப்படி விரட்டுகிறாள். உங்களுக்கே அதுதான் இஷ்டமென்றால் அநுபவியுங்களேன்! எனக் கென்ன?’ என்றவள், தந்தை படுத்திருந்த அறைக்குச் சென்றுவிட்டாள்.

ஹரி கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தபோது வசந்திக்கு நெஞ்சை நெருடுவது போல் இருந்தது. சுசீலாவின் அலட்சியமான பேச்சுக்கு உடனே சரியான பதிலடி கொடுக்காமல் இருந்துவிட்டதை எண்ணி அவள் உள்ளம் குமுறியது. இனிமேல் அப்பா வைப் பார்க்கக்கூட இங்கே அடிக்கடி வரக்கூடாது; ஹரிக்கு எப்போது ஊருக்கு வரத் தோன்றுகிறதே அப்போது வரட்டும், பார்த்துக் கொண்டால் போதும் என்று வசந்தியின் உள்ளம் ஒருகணம் எண்ணியது.

பாகவதர் புரண்டு படுத்தார்.

‘அப்பா!’ என்று மெதுவாகக் கூப்பிட்டாள் வசந்தி.

அரைத்துாக்கத்திலோ மயக்கத்திலே இருந்த பாகவதர் தம் விழிகளை மெதுவாகத் திறந்து, என்ன?’ என்று மகளை நோக்கினார்.