பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணோதயம் 1 :

அநுபவித்துப் பாடிக்கொண்டிருந்தான். இசையிலே பிறந்து இசையிலே முடியும் இந்த உலகில் ஒவ்வோர் அங்கமும் இசையின் அம்சமே அல்லவா? பூபாளம், தேவக்ரியா, ரேவகுப்தி, தேவகாந்தாரி என்று மாறி மாறி, ஆனால் அதன் அதன் உண்மை உருவம் சிறிதும் மாறாமல், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, ஞானத்தின் சிறப்பை எடை போட்டுப் பூரணத் தன்மையுடன் முறைப்படி அவன் இசைத்துக் கொண்டிருந்தான்.

தன்யாசியை அவன் பாடிக் கொண்டிருந்தபோது பூமியில் தெளிவு பளிச்சிட்டது. பைரவிக்கு வந்தான் மண்ணின் மாண்பு தெரிந்தது; மாந்தரின் குணம் புரிந்தது-

ஹரி பாடுவதை நிறுத்தினான். தம்பூராவை எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். கதவு மூடியிருந்ததைக் கண்டதும் “திக் கென்றது. ஒரு கணம் யோசித்தான். கதவை மூடிக்கொண்டு உட்கார்ந்ததாக அவனுக்கு நினைவில்லை. அது பழக்கமும் இல்லை, கதவை மூடிக் கொண்டு பாடக்கூடாது என்பது, பாகவதரின் - குருநாதரின் உத்தரவு, சாதகம் செய்வது தெளிவாகக் கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

ஹரி சாதகம் செய்யும்போது அவர் கட்டிலில் படுத் திருந்தவாறே கேட்டுக் கொண்டிருப்பார். தவறு இருந்தால் உடனுக்குடன் கவனித்துக் திருத்துவது வழக்கம். இன்று அவர் ஊரில் இல்லை. ஆனால்

அந்தப் பழக்கத்தையொட்டிய தன் செய்கைக்கு இன்று ஏற்பட்ட கண்டனத்தை அவன் பூரணமாக அறியா விட்டாலும், அது யாரால் ஏற்பட்டிருக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது, அதை எண்ணிப் பார்க்கையில் மனத்துக்கு வேதனையாகவும் இருந்தது.

சுசீலாவுக்கு ஆதியிலிருந்தே அவனிடம் வெறுப்பு. ஆனால், அது ஏன் ஏற்படவேண்டும்? அப்படி ஏற்பட