பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணோதயம் 13

‘உனக்குத் தூக்கம் வந்தால் துரங்கேன்’ என்று லட்சுமியம்மாள் ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.

பெண்ணுக்காக என்னதான் பரிந்து பேசுகிறவளாக இருந்தாலும், மகாவித்துவானுக்கு வாழ்க்கைப்பட்டு அவருடன் இத்தனை காலமாக வாழ்வதனால் லட்சுமி அம்மாளுக்குச் சிறிது சங்கீத ஞானம் ஏற்பட்டிருந்தது. ‘பாடுகிறவனைத் தடுக்கக் கூடாது; அது தவறு. மேலும், அதற்காகத்தானே அவர் அவனை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற விஷயங்கள் அவளுக்கும் புரிந்தன. அதனால் அவள் ஏதும் கூறவில்லை. அக்காவிடம் சொல்லச் சுசீலாவுக்கு விருப்பம் இல்லை. ‘இந்த வீட்டில் அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் ஒரே கட்சி; நான்தான் தனி’ என்று மனத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தோடு அவள் எழுந்தாள். ஹரி பாடிக்கொண் டிருந்த அறையின் கதவைப் “படி'ரென்று அறைந்து சார்த்தி விட்டுத் திரும்பவும் தன் படுக்கையில் வந்து தொப்பென்று விழுந்தாள்.

இதை எல்லாம் கவனிக்காத ஹரி பாடிக்கொண்டே இருந்தான். அந்த அறையின் நான்கு சுவர்களையும் தாண்டி, சுசீலா மூடிய கதவையும் கடந்து, அந்த இன்னிசை அப்பொழுதும் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. அது காயத்திரிக்குத் தேவகானமாகவும், லட்சுமிக்கு ஆதியி லிருந்தே பழகிப் போன ஒன்றாகவும் இருந்தது. சுசீலாவுக்கு மட்டும் நாராசமாக இருந்ததோ?

சுசீலாவின் புறச் செய்கைகளைப் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றும். ஆனால் மற்றவர் களுக்குத் தெரியாமல், அவள்தான் மற்றவர்களை விட ஆத்மார்த்தமாக ஹரியின் பாட்டைக் கேட்டு ரசித்தாள் ஆம்! ஹரியை வெறுக்க முடிந்த அவளால் அவனது கந்தர்வகானத்தை வெறுக்கவோ வேண்டாமென்று ஒதுக்கிச் செவிகளைப் பொத்திக்கொண்டு ஓடவோ முடியவில்லை.