பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புல்லின் இதழ்கள்

  • வேதனையைத் தாளாமல் தவித்தது. அதற்குள் காசியதரிசி இந்தச் சமாசாரத்தைக் கேட்டுப் பாகவதர் வீட்டுப் பெண் கள் இருந்த இடத்துக்கு ஒடி வந்தார்; கலவரப்பட்டிருந்த அவர்களுக்கு ஆறுதல் கூறினார். “நான் இப்பொழுதே போலீசுக்குத் தகவல் கொடுத்து திருடனைக் கண்டுபிடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். நீங்கள் வண்டியில் போங்கள்’ என்று கூறியபோதே ஹரியும் அங்கே வந்து சேர்ந்தான்.

ஹரியைக் கண்டதும் காரியதரிசிக்குச் சற்றுத் தெம்பு வந்தது. ஹரி, சுலோவின் நெக்லெஸை எவனோ அறுத்துக்கொண்டு ஓடிவிட்டான். நான் போலீசில் புகார் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கிறேன். நீங்கள் இவர்களைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துப் போங்கள்’ என்றார்.

அதற்குள் லட்சுமியம்மாள், * நீ ங் க ள் மேற். கொண்டு ஆகவேண்டியதைக் கவனியுங்கள். எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. கையை விட்டுப் போன பொருள் இனிமேல் கிடைக்கவா போகிறது?” என்று. வருத்தத்துடன் கூறியபடிப் புறப்பட்டாள்.

ஹரி எல்லாருடனும் வீட்டை அடைந்த போது உள்ளேயிருந்து தம்பூராவின் இனிய நாதமும் ராக ஆலாபனையும் அவர்களை வரவேற்றன.

ஹரி, ஒரு கணம் தயங்கினான். குருநாதரின் குரல் தான். பாகவதர் கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்து கொண்டிருந்தார். ‘வண்டியில் வந்ததே தவறு. இந்த உடம்போடு இவர் ஏன் பாட வேண்டும்?’ என்று. அவன் மனத்துக்குள் கவலை கொண்டான். T சாதாரண சமயமாக இருந்தால், சுசீலாவே கேலி செய்திருப்பாள். ஆனால் அவளுடைய கேலியும் கிண் டலும் நெக்லெஸோடு பறி போய் விட்டன. பெட்டிப்