பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 புல்லின் இதழ்கள்

குடுகுடுவென்று கொண்டு போய்க் கச்சேரியில் நெக் லெஸைத் தொலைத்திருக்கிறாள். நீங்களே விசாரியுங்கள்’ என்று லட்சுமியம்மாள் கூறிய போதே, உள்ளே இருந்த சுசீலாவின் விம்மல் ஒலி பெரிதாகக் கேட்டது. அதைக் கேட்டதும் சுந்தரியின் மனம் வேதனைப்பட்டது.

குழந்தையைக் கோபித்துக் கொண்டால் அவள் என்ன செய்வாள்? அவளாகவா தொலைத்தாள்? ஏதோ போதாத வேளை!’ என்று சுந்தரி கூறியபோதே, லட்சுமி யம்மாள், ‘கச்சேரி கேட்க வருகிறவளை, சதிர் ஆடப் போகிறவள் மாதிரி, பெட்டியில் இருக்கிறதை எல்லாம் எடுத்து வாரிப் போட்டுக் கொண்டு யார் வரச் சொன்னது? எவன் கண்ணைப் பறித்ததோ, அறுத்து எடுத்துக் கொண்டு போனான்! இனிமேல் கிடைத்த அன்றுதான்

நிச்சயம்’ என்றாள்.

‘காரியதரிசி சொன்னதிலிருந்து எனக்கு என்னவோ எப்படியும் அது கிடைத்துவிடும் என்றுதான் தோன்று கிறது. போலீசில் புகார் கொடுத்துத் தேடச் சொன்னால் அகப்படாமல் எங்கே போய்விடும்?’ ‘ என்று ஆறுதல் கூறினாள் சுந்தரி.

பாகவதருக்கு விஷயம் புரிந்து விட்டது. நெக்லெஸின் விலையை எண்ணி அவருடைய மனமும் ஒரு கணம் சங்கடப்பட்டது. என்றாலும், போனது போய்விட்டது. இனிமேல் அதற்காக அமர்க்களப்படுத்தி என்ன பிரயோ சனம்? நம்முடைய பொருளானால் கிடைக்கட்டும்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டார். மேலும், அவருக்கு அப்போது இருந்த மன மகிழ்ச்சியில் ஹரியைத் தவிர உலகில் எந்த பொருளுமே பொருட்டாகத் தோன்ற வில்லை. தம் லட்சியத்தை எல்லாம் அள்ளிக் கொட்டி உருவாக்கிய ஹரி, அதைச் செவ்வனே நிறைவேற்றி