பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 195

பேசி முடித்ததுமே புறப்பட்டு வந்து விட்டேன். இங்கே வந்து தம்பூராவைப் பார்த்ததும் உன்னைப் போல் பாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது; பாடிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களும் வந்து விட்டீர்கள்’ என்று பாகவதர் கூறினார்.

மறுநாள் காலை சுமார் எட்டு மணிக்கு டாக்டர் வந்தார். பாகவதரின் உடம்பைப் பரிசோதித்து, “உடல் நிலை தேறியிருக்கிறது. தலைக் காயங்கூட ஆறிவிட்டது. நான் சொன்னபடியே, நல்ல ஒய்வு எடுத்துக் கொண்டி ருக்கிறீர்கள்’ என்று கூறியபோது பாகவதர் உள்பட அங்குள்ள அனைவரும் லேசாக மனத்திற்குள் சிரித்துக் கொண்டனர். தலைக்குத் தடவ ஒரு களிம்பையும் உள்ளுக்குச் சாப்பிடப் புதிய மருந்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு டாக்டர் புறப்பட்டார். அதற்குள் ஹரியைப் பார்த்து, ‘நேற்றுப் பிரமாதமாகப் பாடினர் களாமே? கலெக்டர் ரொம்பப் புகழ்ந்து பேசினாராமே? இதோ என் பாராட்டுர்கள்’ என்று கூறிய வண்ணம் அவனது கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

பிறகு சற்றைக்கெல்லாம் அங்கே வந்த காரியதரிசி, பாகவதரிடம் சமாளிக்க முடியாத ஜனத்திரளில் நம் வீட்டிலிருந்து வந்தவர்களை வண்டி வைத்து அனுப்ப முடியாமற் போய்விட்டது’ என்று மிகவும் குறைப் பட்டுக் கொண்டார். பிறகு, ஹரி பிரமாதமாகப் பாடின தையும், அதை எல்லோருமே புகழ்வதையும் கூறினார். உடனே நெக்லெஸ் நினைவு வரவே, ஏதோ திருஷ்டி பரிகாரம் மாதிரி இப்படி ஒர் அசந்தர்ப்பம் நேர்ந்து விட்டது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

போனால் போகிறது. நம்முடைய பொருளானால் தானே கிடைக்கிறது’ என்று பாகவதர் சமாதானம் கூறினார்.